மனிஷாவுடன் ரொமான்ஸ் அனுபவம்: ஷாம்

Bookmark and Share

மனிஷாவுடன் ரொமான்ஸ் அனுபவம்: ஷாம்

நடிகர் ஷாமுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டு. அவர் பல முன்னணி கதாநாயகிகள் பலருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் 25 படங்களில்தான் நடித்துள்ளார். ஏறக்குறைய எல்லா முன்னணி கதாநாயகிகளுடனும் நடித்துவிட்டார். ஜோதிகா, சிம்ரன், அசின், சினேகா, ப்ரியாமணி  என்று நடித்து இப்போது மனிஷா கொய்ராலாவுடன் இணைந்துள்ளார். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் ஒரு மெல்லிய கோடு படத்தில் தான் மனிஷாவுடன் நடிக்கிறார். 

மனிஷாவுடன் நடித்த அனுபவம் பற்றிக் கூறும் போது।.. "இது ஒரு புதுமையான வித்தியாசமான அனுபவம். என்னைவிட வயது அதிகமுள்ள நடிகையுடன் நடிப்பது புதுமை. கதைப்படியும் அப்படித்தான் இருக்கிறது. மனிஷா பெரிய நடிகை, இந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நடித்துள்ளவர். அவருடன் எப்படி நடிப்பது சீனியர் நடிகை என்று எனக்குள் ஒரு தயக்கமும் பதற்றமும் இருந்தது உண்மை. ஆனால் அவரோ மிகவும் புரொபஷனலாக இருந்தார் எளிமையாகப் பேசி எங்களிடையே இருந்த அசௌகரியத்தை போக்கினார். ஒரு கட்டத்தில், நாம் காதலர்கள், நெருங்கி நடிக்க வேண்டும், ரொமான்ஸ் பண்ண வேண்டும் இப்படி சங்கோஜப் பட்டால் எப்படி என்று கேட்டார். புரொபஷனலாக இருங்கள் என்றார்.

இப்படிப் பேசி என் கூச்சம், தயக்கத்தைப் போக்கினார் பிறகு இயல்பாகி விட்டேன். தான் நடித்தது அவருக்கத் திருப்தி வரவேண்டும். இயக்குநர் ஓகே என்று கூறிவிட்டால் கூட இன்னும் பெட்டராக செய்யலாம் என்று மீண்டும் ஒரு முறை நடிக்கிறார். இயக்குநர் எத்தனைமுறை நடிக்கச் சொன்னாலும் முகம் சுழிக்காமல் ஒத்துழைக்க வேண்டும். அவர் எதிர்ப்பார்க்கும் வரை நடித்துக் கொடுப்பதுதான் நம் கடமை என்று அவர் கூறியதும் எனக்கு மிகவும் ஆச்சரியம். அட  தொழிலில் எவ்வளவு தெளிவாக இருக்கிறார். நான் அவரிடம் கற்ற பாடமாக இதை நினைக்கிறேன். இவ்வாறு ஷாம் கூறினார்.


Post your comment





Related News
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!
பெண் பாதுகாவலரை வேலைக்கு அமர்த்திய மனிஷா கொய்ராலா
பிரதமருக்கு நன்றி சொன்ன மனீஷா கொய்ராலா!
பிணமாக நடிக்கும் மனீஷா கொய்ராலா
தமிழில் மீண்டும் மனீஷா கொய்ராலா
ஆந்திராவில் கல்கி ஆசிரமத்தில் வரதீட்சை பூஜை: மனிஷா கொய்ராலா–ஹேமமாலினி பங்கேற்றனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions