ஒரு மெல்லிய கோடு படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாம்

Bookmark and Share

ஒரு மெல்லிய கோடு படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாம்

தமிழில் ‘12பி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷாம். இப்படம் 2001ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ஷாமுக்கு ஜோடியாக அப்போது முன்னணி நடிகையாக விளங்கிய சிம்ரன் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் படத்திலேயே இரண்டு முன்னணி நடிகைகளோடு நடித்த வாய்ப்பு இவருக்கு அமைந்தது.

இப்படத்தையடுத்து இவரது நடிப்பில் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’, ‘லேசா லேசா’, ‘இயற்கை’, ‘உள்ளம் கேட்குமே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ‘6 மெழுகுவர்த்தி’ இவருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது.

தற்போது ஷாம், அர்ஜூனுடன் இணைந்து ‘ஒரு மெல்லிய கோடு’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. தன்னுடைய பிறந்த நாளை ‘ஒரு மெல்லிய கோடு’ படத்துடன் கொண்டாடியுள்ளார். ஷாம்மிற்கு அர்ஜுன் மற்றும் படத்தின் இயக்குனர் ரமேஷ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஷாம் நடிப்பில் தற்போது ‘புறம்போக்கு’ படம் வெளியாகவுள்ளது. 

 


Post your comment





Related News
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஒரு மெல்லிய கோடு படத்தில் படப்பிடிப்பு முடிந்தது
பாங்காக் செல்கிறது மெல்லிய கோடு டீம் -
ஒரு மெல்லிய கோடு படத்தில் காஷ்மீர் அழகி
ஒரு மெல்லிய கோடு படப்பிடிப்பு தொடங்கியது
25 நாளில் எடுக்கப்பட்ட கொண்டான் கொடுத்தான் திரைப்படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions