எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன்! - ஷாம்

Bookmark and Share

எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன்! - ஷாம்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'இயற்கை' படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் ஷாம். அதன்பிறகு இப்போது அவர் இயக்கியுள்ள புறம்போக்கு படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இதில் ஆர்யா புரட்சியாளராக, விஜய்சேதுபதி தூக்குதண்டனை கைதியாக நடிக்க, ஷாம் ஜெயில் இன்ஸ்பெக்டர் ரோலில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் முதலில் ஷாமுக்கு எஸ்.பி.ஜனநாதன் வாய்ப்பே கொடுக்கவில்லையாம்.

ஆனால் அவர் படம் இயக்குகிற சேதி அறிந்து அவரை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் கேப்டன் என்று சொன்னாராம் ஷாம். அதோடு, எனக்கு கேரக்டர் எதுவும் இல்லையா கேப்டன் என்றும் உரிமையோடு கேட்டாராம்.

அதன்பிறகுதான் ஷாமுக்கு என்ன வேடம் கொடுக்கலாம் என்று யோசித்த ஜனநாதன், இன்னொரு நடிகருக்கு கொடுக்கயிருந்த இன்ஸ்பெக்டர் வேடத்தை அவருக்கு கொடுத்தாராம்.

அதனால்தான் இரண்டு ஹீரோ படமாக உருவாகயிருந்த புறம்போக்கு இப்போது மல்டி ஹீரோ கதையில் உருவாகியிருக்கிறதாம்.மேலும், இந்த படத்தில் மூன்று ஹீரோக்கள் நடித்தபோதும் எங்களுக்குள் எந்தவித ஈகோவும் இல்லை.

அவரவர் கேரக்டரை உணர்ந்து நடித்தோம். முக்கியமாக எஸ்.பி.ஜனநாதன் என்ற இயக்குனர் மீதுள்ள மரியாதை காரணமாகவும், அவர் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவும் எங்களது கேரக்டரைப்பற்றி எந்தவித கவலையும் படாமல் நடித்தோம்.

நான் இயற்கை படத்தில் நடித்தபோது அவர் படம் இயக்கும் திறனைப்பார்த்து வியந்தேன். அதனால்தான் அப்போதில் இருந்தே அவரை கேப்டன் என்று அழைத்து வருகிறேன்.

எப்போதுமே எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன். என்னைப்பொறுத்தவரை ஒரு நல்ல தகுதியான இயக்குனர் அவர். அந்த வகையில் என்னுடைய கேப்டனின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்கிறார் ஷாம்.


Post your comment





Related News
வேலூர் ஜெயிலில் பேரறிவாளனை சந்தித்த டைரக்டர் ஜனநாதன்
எஸ்.பி.ஜனநாதனுக்கு அதிர்ச்சி கொடுத்த கேமராமேன்!
உயிரை பணயம் வைத்து நடித்த கார்த்திகா! - எஸ்.பி.ஜனநாதன்
6 வருடங்களுக்குப் பிறகு மோதும் சூர்யா, எஸ்.பி.ஜனநாதன்
விவசாயிகளின் பிரச்சினை பற்றி படம் இயக்குகிறார் எஸ்.பி.ஜனநாதன்
மகள் நடிப்பு - ஜனநாதனுக்கு வாழ்த்து தெரிவித்த ராதா!
புறம்போக்கு படத்தின் டீசர் இன்று இரவு வெளியீடு
அண்ணா ஹஸாரே இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார்: இயக்குனர் எஸ்பி ஜனநாதன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions