போதைக்கு அடிமையான சார்மிளா! புகாருக்கு முதல் கணவர் விளக்கம்

Bookmark and Share

போதைக்கு அடிமையான சார்மிளா! புகாருக்கு முதல் கணவர் விளக்கம்

90களில் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் சர்மிளா. இவர் தற்போது அவருடைய முதல் கணவர் பற்றி பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

நடிகர் பாபு ஆனந்தை காதலித்து வந்த அவர் சில வருடங்கள் கழிந்து பிரிந்தார். பின்னர் துணை இயக்குனராக இருந்த கிஷோர் சத்யாவை திருமணம் செய்து கொண்டார். ஷார்ஜாவில் வாழ்த்து வந்த அவர் அவரையும் சில வருடங்களில் விவாகரத்து செய்தார். அதன் பிறகு ராஜேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் முதல் கணவர் கிஷோர் சத்யா கொடுமையால் தன் வாழ்க்கையை தொலைத்து விட்டதாக ஒரு டிவி பேட்டியில் கூறியுள்ளார் அவர்.

"திருமணத்திற்கு பிறகு ஷர்ஜாவில் செட்டில் ஆன பிறகு தான் அவரின் சுயரூபம் தெரிந்தது. பிரபலமாக வேண்டும் என்பதற்காக மட்டுமே என்னை திருமணம் செய்து கொண்டுள்ளார். என்னை நடிக்க வேண்டாம் என தடுத்ததால் நடிகர் விக்ரம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் கர்பமாக இருக்கிறேன் என தெரிந்ததும் அவருக்கு கோபம் வந்தது. குழந்தையை கலைக்க பல்வேறு முயற்சிகள் செய்தார், அதனால் நான் அபார்ஷன் செய்ய வேண்டியதானது. என் குழந்தை மட்டுமின்றி என் வாழ்க்கையும் தொலைத்துவிட்டேன்" என கூறியுள்ளார்.

ஆனால் கிஷோர் அளித்துள்ள பேட்டியில் "சர்மிளா எனக்கு மனைவியே இல்லை. இருவரும் ஒப்புக்கொண்டு இணைந்தால் தான் அது திருமணம். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வேன் என சொன்னதால் தான் அவரை மணந்தேன். பின்னர் தான் சர்மிளா போதை மற்றும் டிரக்ஸுக்கு அடிமையாகி இருந்தது தெரியவந்தது. என் குடும்பத்துக்காக அவரை விவாகரத்தும் செய்தேன்" என தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions