
எழுத்தாளர் கல்புர்கி கொலை, மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு கண்டனம் தெரிவித்து,
எழுத்தாளர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர், தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில், விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் செயலுக்கு பிரபல நடிகை ஷபனா ஆஸ்மி ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கலைஞர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்ப ஒப்படைப்பது, அவர்களின் பணி மீது உள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது.
விருதுகளை ஒப்படைப்பது, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு அடையாள செயல் ஆகும். எனவே அவர்களை குற்றம் சாட்டுவதை விடுத்து, அதற்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்வதே சிறந்தது’ என்றார்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries