கேரள மாநிலத்தின் சுற்றுலா தூதுவர்களாக ஷாருக்கான், ஸ்டெபிகிராப்: வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க அரசு ஏற்பாடு

Bookmark and Share

கேரள மாநிலத்தின் சுற்றுலா தூதுவர்களாக ஷாருக்கான், ஸ்டெபிகிராப்: வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க அரசு ஏற்பாடு

கேரளாவில் இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரையும், மலைவாசஸ்தலங்களும் உள்ளன. ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் இங்கு ஏராளமாக உள்ளன. இவற்றை நாடி வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கேரளாவில் மது பார்கள் மூடப்பட்டதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து விட்டது. இதனால் வருவாய் இழப்பும் ஏற்பட்டது.

இதனை ஈடுகட்டவும், மீண்டும் சுற்றுலா துறைக்கு புத்துயிர் ஊட்டவும் அரசு முடிவு செய்தது. இதற்காக பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மற்றும் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபிகிராப் ஆகியோரை கேரள மாநில சுற்றுலா துறையின் விளம்பர தூதுவர்களாக நியமிக்க ஏற்பாடு நடந்தது. இவர்களுக்கான ஊதியம் மற்றும் ஒப்பந்த விபரங்களை அதிகாரிகள் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபிகிராப் தற்போது விளையாட்டில் இருந்து ஒதுங்கி விட்டார். இருந்தாலும் ஜெர்மன் நாட்டில் அவர் இன்னும் பிரபலமாகவே விளங்குகிறார். அவர் மூலம் வெளிநாட்டு பயணிகளை கேரளாவுக்கு ஈர்த்து வர முடியும் என அரசு எண்ணுகிறது.

இது போல இந்தி நடிகர் ஷாருக்கான் மூலம் வடமாநில பயணிகளை கேரளாவுக்கு அழைத்து வர முடியும் என்றும் அரசு நம்புகிறது. இவர்கள் மூலம் கேரளாவின் ஆயுர்வேத சிகிச்சையை பிரபலபடுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

குஜராத் மாநிலத்தின் சுற்றுலா துறை விளம்பர தூதுவராக நடிகர் அமிதாப்பச்சனும், மத்திய அரசின் சுற்றுலா துறை தூதுவராக நடிகர் அமீர்கானும் உள்ளனர். 

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions