அரை சதமடித்து அடுத்த ஆண்டுக்குள் நுழைகிறார், ஷாருக் கான்

Bookmark and Share

அரை சதமடித்து அடுத்த ஆண்டுக்குள் நுழைகிறார், ஷாருக் கான்

உலகளாவிய அளவில் அதிக சம்பளம்பெறும் கதாநாயகர்களில் ஒருவராக கருதப்படும் நடிகர் ஷாருக் கான் ‘பவுஜி’, ‘சர்க்கஸ்’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி, பின்னர் 1992-ம் ஆண்டு வெளியான ‘தீவானா’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம்பதித்தார்.

‘பாஸிகர்’, ‘டர்’, ‘அன்ஜான்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும், மேலும் சில படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களிலும் பிரகாசித்த ஷாருக் கான், ‘தில்வாலே துல்ஹனிய லேஜாயேங்கே’ படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற இந்திப்பட கதாநாயகனாக உயர்ந்தார்.2007-ம் ஆண்டில் ‘கவுன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு இந்தியர் வீட்டு வரவேற்பறைக்குள்ளும் நுழைந்த இவர் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியில் மோதும் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியின் உரிமையாளர்களில் இருவராகவும் உள்ளார்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றதுடன் பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வாரிக்குவித்து ‘பாலிவுட்டின் பாதுஷா’ ஆக திகழும் ஷாருக் கான் இன்று தனது 51-வது வயதில் காலடி பதிக்கிறார்.

இதையொட்டி, பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு கைபேசி மற்றும் டுவிட்டர் மூலம் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions