நான் எப்போதும் வெற்றியை கொண்டாடியது இல்லை: ஷாருக்கான் பேட்டி

Bookmark and Share

நான் எப்போதும் வெற்றியை கொண்டாடியது இல்லை: ஷாருக்கான் பேட்டி

இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் வெற்றியை ஒருபோதும் கொண்டாடியது கிடையாது. நீங்கள் என்னை தொடர்ச்சியாக 7 நாட்கள் சந்தித்தாலும், ஒரே ‘பேண்ட்’ தான் அணிந்திருப்பேன்.

பொதுமக்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான ஒன்று. எனக்கு என்று ஏதும் வாங்கியது கிடையாது. தனிப்பட்ட முறையில் எனக்கு என்று எந்த தேவையும் இல்லை.

அதேசமயம், என்னுடைய குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பாடல்களை எல்லாம் கேட்க மாட்டேன். ஆகையால், ‘ஸ்பீக்கர்’ (ஒலிப்பெருக்கி) வாங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை.

எனக்கு பெரிய விஷயங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தான் பெரிய வீடு, பெரிய அலுவலகம் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறேன்.

இதற்கு தான் பெரும்பாலான பணத்தை செலவிடுகிறேன். உணவகத்துக்கு எல்லாம் சென்று சாப்பிட மாட்டேன். பெரும்பாலும் வீட்டில் சாப்பிடுவதை தான் வழக்கமாக கொண்டிருக்கிறேன். ஆடைகளை அடிக்கடி வாங்க மாட்டேன்.

வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எதாவது புதிதாக முயற்சிக்க வேண்டும் என்று அடிக்கடி மனதுக்குள் தோன்றும். டெல்லியில் இருந்து வந்த அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒருவன், பெற்றோரின் ஆதரவு இல்லாமல், தனியாக நின்று இந்த வாய்ப்புகளை எல்லாம் பெற்றிருக்கிறேன்.

சில விஷயங்களில் நான் தோற்று இருக்கலாம். ஆனால், என்னால் முயன்ற அளவுக்கு அதில் உழைப்பை கொடுத்திருக்கிறேன். நாம் எல்லோரும் தோற்பது வாடிக்கையான ஒன்று தான். நமது வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரலாம். அதற்குள் எதாவது புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.

இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்தார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions