நடிகர் ஷாருக்கானுக்கு அபராதம்- மும்பை மாநகராட்சி நடவடிக்கை

Bookmark and Share

நடிகர் ஷாருக்கானுக்கு அபராதம்- மும்பை மாநகராட்சி நடவடிக்கை

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் காரை நிறுத்துவதற்காக மும்பை பாந்திராவில் உள்ள தனது பங்களா அருகே சாலையில் கான்கிரீட் சரிவு பாதை ஒன்றை கட்டியிருந்தார். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பூனம் மகாஜன் எம்.பி., மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து மாநகராட்சி கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி ஷாருக்கான் வீட்டருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கான்கிரீட் சரிவு பாதையை இடித்து அகற்றியது.

இந்தநிலையில் அந்த கான்கிரீட் சரிவு பாதையை இடித்து அகற்ற ஆகிய செலவை மாநகராட்சி நிர்வாகம், ஷாருக்கானுக்கு அபராதமாக விதித்து உள்ளது. இது குறித்து அந்த பகுதி மாநகராட்சி கவுன்சிலர் பிரைன் மிரண்டா கூறுகையில், நடிகர் ஷாருக்கான் கட்டியிருந்த சட்டவிரோத கான்கிரீட் சரிவு பாதையை இடித்ததற்காக அவருக்கு மாநகராட்சி ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளது. இதற்கான நோட்டீசு கடந்த 5-ந்தேதி அவரிடம் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை அவர் 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு அவர் செலுத்த தவறினால் இந்த தொகை அவரின் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.  


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions