28 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் பெற்ற ஷாருக்கான்!

Bookmark and Share

28 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் பெற்ற ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கான் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். அங்குள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்து தேறினார். 1988-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறிய அவர், பட்டம் பெறாமல் விட்டு விட்டார். அவர் மும்பை வந்து இந்திப்பட உலகில் நுழைந்து, முன்னணி நட்சத்திரமாகி விட்டார். 

இந்த நிலையில் தனது ‘பேன்’ (விசிறி) படத்தின் பாடல் வெளியீட்டுக்காக டெல்லி சென்ற அவர், தான் படித்த ஹன்ஸ்ராஜ் கல்லூரிக்கு நேற்று சென்றார். அங்கு, தனது பி.ஏ. பட்டத்தை கல்லூரி முதல்வர் ராமா சர்மாவிடம் இருந்து பெற்றார். 

அப்போது ஷாருக்கான், “இது எனக்கு ஒரு சிறப்பான தருணம். 1988-ம் ஆண்டு கல்லூரியை விட்டு வெளியேறிய நான் திரும்பவும் வந்திருக்கிறேன். நான் இப்போது தவற விட்டது, என் குழந்தைகளைத்தான். நான் அவர்களுக்கு எனது கல்லூரியின் ஒவ்வொரு மூலையையும் காட்ட விரும்பினேன். ஆனால் அவர்கள் இப்போது என்னுடன் வரவில்லை” என நெகிழ்ச்சியுடன் கூறினார். 

கல்லூரி முதல்வர் ராமா சர்மா, “இத்தனை ஆண்டுகள் கழித்து நாங்கள் ஷாருக்கிற்கு பட்டம் அளிப்பதில் மிகவும் மகிழ்கிறோம். அவரது பட்டத்தை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருந்தோம்.

அதை அவருக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறோம். ஒரு சூப்பர் ஸ்டாரை மாணவராக பெற்றிருந்ததற்கு இந்த கல்லூரி பெருமிதம் கொள்கிறது” என குறிப்பிட்டார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions