என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாகத் தெரியும்: ஷாருக்கான்

Bookmark and Share

என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாகத் தெரியும்: ஷாருக்கான்

இந்திப்பட உலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். இப்போது ‘ரயீஸ்’, ‘டிஜயர் ஜிந்தகி’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். பெண்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக அவ்வப்போது ‘கிசு கிசு’க்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தன்னைப்பற்றி எழும் கிசு கிசுக்களுக்கு நடிகர் ஷாரூக்கான் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் ஒரு நடிகன். சுமார் 20 வருடங்கள் இந்த துறையில் இருக்கிறேன். உலகின் மிக அழகான பெண்களுடன் நடித்திருக்கிறேன். நான் வெளிநாட்டிலும், என்னுடன் நடிக்கும் நடிகைகளுடனும் ரகசிய தொடர்பு வைத்துக் கொண்டதாக வதந்திகளை பரப்பினார்கள்.இது போன்ற செய்திகள் எந்த விதத்திலும் என்னை பாதிக்காது. என் மனைவி கவுரியையும் பாதிக்காது. என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாக தெரியும். நான் என்னுடைய வேலையை தவிர வேறு எதையும் கவனிக்க எனக்கு நேரம் இல்லை என்பதை என் மனைவி அறிவார். 

எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தால், அது எங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்பதைப் பற்றியதாகத்தான் இருக்கும். எனவே கிசுகிசுக்களைப் பற்றி நான் கவலைப்படவேண்டியதில்லை” என்றார்.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions