ஒபாமாவை மிஸ் பண்ணிட்டேன்... அடுத்த முறை வரும்போது சைய்யா... சைய்யாவிற்கு ஆடுவேன்: ஷாருக்கான்

Bookmark and Share

ஒபாமாவை மிஸ் பண்ணிட்டேன்... அடுத்த முறை வரும்போது சைய்யா... சைய்யாவிற்கு ஆடுவேன்: ஷாருக்கான்

ஒபாமாவின் முன்னால் பாங்கரா டான்ஸ் ஆட முடியாமல் போய்விட்டது. அடுத்தமுறை வரும் போது நிச்சயம் சைய்யா... சைய்யா பாடலுக்கு நடனமாடுவேன் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூறியுள்ளார்.

இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா மத நல்லிணக்கம் மற்றும் சம உரிமை குறித்து பேசும்போது தனது பெயரை குறிப்பிட்டதை பெருமையாக கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று டெல்லி டவுன் ஹாலில், 'இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கக் கூடிய எதிர்காலம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அப்போது இந்தியா குறித்து தனது பார்வையில் பலதரப்பட்ட விஷயங்களை அவர் பேசினார்.இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள மதச் சுதந்திரம் குறித்து பேசிய ஒபாமா, "ஒரு தனிநபர் தான் விரும்பும் மதத்தை, கொள்கையை பயமின்றி, பாகுபாடின்றி பின்பற்ற உரிமை இருக்கிறது.

மத, இன, நிறப் பாகுபாடுகள் நம்மைப் பிரித்தாளாமால் தற்காத்துக் கொள்ள வேண்டும்.அந்த வகையில் ஷாருக்கான், மேரிகோம், மில்காசிங், கைலாஷ் சத்யார்த்தி இவர்கள் அனைவரது வெற்றியையும் சமமாக கொண்டாட வேண்டும்.

அவர்கள் மதம், நிறம் சார்ந்த பேதங்கள் கூடாது" என்றார்.அந்த வகையில் ஷாருக்கான், மேரிகோம், மில்காசிங், கைலாஷ் சத்யார்த்தி இவர்கள் அனைவரது வெற்றியையும் சமமாக கொண்டாட வேண்டும்.

அவர்கள் மதம், நிறம் சார்ந்த பேதங்கள் கூடாது" என்றார்.இது குறித்து தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஷாருக்கான் கூறும்போது, "அமெரிக்க அதிபர் ஒபாமா மத நல்லிணக்கம் மற்றும் சம உரிமை குறித்து பேசும்போது எனது பெயரை குறிப்பிட்டதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.

ஒபாமாவிற்காக என்னால் பாங்கரா டான்ஸ் ஆட முடியாமல் போனது. அடுத்த முறை நிச்சயம் அவருக்காக 'சைய்ய சைய்யா' பாடலுக்கு நடனமாடுவேன்" என்று கூறியுள்ளார். ஷாருக் ஆடும் நடனத்தைப் பார்க்க மீண்டும் ஒருமுறை இந்தியா வருவாரா ஒபாமா?


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions