சின்னத்திரையில் ஜொலிக்கும் வெள்ளி்த்திரை நட்சத்திரங்கள்

Bookmark and Share

சின்னத்திரையில் ஜொலிக்கும் வெள்ளி்த்திரை நட்சத்திரங்கள்

கோலிவுட், பாலிவுட் என எல்லா திரையுலகிலும் முன்னணியில் உள்ள திரைநட்சத்திரங்கள், சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது தொடர்கதையாக உள்ளது. முன்னணி நட்சத்திரங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பெரிதும் விரும்புகின்றனர்.

பலர் திரையுலகில் நல்ல உச்சத்தில் உள்ளபோதே, சின்னத்திரையிலும் ஜொலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அமிதாப் பச்சன், கோன் பனோகா கரோர்பதி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரை ரசிகர்களை தன்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்.

 

இதேபோல் பலரும் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டிவருகின்றனர். டி.வி. நிகழ்ச்சிகள், மக்களை நேரடியாக சென்று சென்றடைவதால், பலரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புகின்றனர். அந்த வகையில், தங்களது கேரியர் வளர்ச்சி்க்காக, சின்னத்திரையை நோக்கி படையெடுத்த நட்சத்திரங்கள் குறித்து காண்போம்...

சல்மான் கான்10 Ka Dum நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சல்மான் கான், அடுத்து பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவின் மூலம் உச்சத்திற்கு சென்றார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில், சல்மான் கான் முன்னணி இடத்தில் உள்ளார்.ஷாரூக் கான்பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழும் ஷாரூக் கான், சின்னத்திரையிலும், அதை கடைப்பிடித்து வருகிறார்.

ஷாரூக் கான் கலந்துகொண்ட கோன் பனேகா கரோர்பதி மற்றும் க்யா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஜ் ஹைய்ன் உள்ளிட்டவைகள், ஷாரூக் கான் பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஆகும். அக்ஷய் குமார்பாலிவுட்டின் ஆக்ஷன் நட்சத்திரமாக திகழும் கில்லாடி குமார் என்கிற அக்ஷய் குமார், தன் ஆக்ஷன் கேரக்டரை, சின்னத்திரையிலும் பேணிக்காக்க வேண்டும் என்று நினைத்ததாலோ என்னவோ, சின்னத்திரையிலும்"காட்ரோன் கி கில்லாடி" என்ற ஆக்ஷன் நிகழ்ச்சியிலேயே அக்ஷய் குமார் அறிமுகமானார்.

அமீர் கான்பாலிவுட் திரையுலகில் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் படங்களை தந்து வரும் அமீர் கான், சின்னத்திரையிலும் தொடர்ந்து ஜொலித்து வருகிறார்.  சமூக கருத்துகளை வலியுறுத்தும் நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதேவின் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் பெரும் வறவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சோனாக்ஷி சின்கா ரியாலிட்டி ஷோவான இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரையில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்கா. இந்த நிகழ்ச்சியின் நடுவர் குழுவில், சோனாக்ஷி சின்காவுடன் இசையமைப்பாளர் விஷால் தட்லானி, சலீம் மெர்ச்சன்ட் மற்றும் பாடகி ஷல்மாலி கோல்கடே உள்ளிட்டோர் இடம்பெற்றனர். இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

 


Post your comment





Related News
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்
பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்
‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள்: ஷாகித் கபூர்
ஷாருக்கான் வீட்டெதிரில் ரசிகைக்கு ஏற்பட்ட சோகம்!
என்னது அந்த நடிகரின் மகளோட அதுவே இவ்வளவு விலையா? - வைரலாகும் புகைப்படம்.!
வைரலாகும் பிரபல முன்னணி நடிகர் மகளின் நீச்சல் குள குளியல் புகைப்படம்.!
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions