ஷாருக்கானை இயக்குகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

Bookmark and Share

ஷாருக்கானை இயக்குகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

ரஜினியை வைத்து எந்திரன் படத்தை இயக்குவதற்கு முன், அப்படத்தை ஷாருக்கானை வைத்து ரோபோ என்ற பெயரில் ஹிந்தியில் இயக்க இருந்தார் ஷங்கர். அப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கவிருந்தது.

பின்னர் ஷங்கருக்கும், ஷாருக்கானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரோபோ படம் ட்ராப்பானது. தற்போது இன்னொரு தமிழ் இயக்குநருக்கு ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கத்தி படத்தை அடுத்து தற்போது சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அகிரா என்ற ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை எ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போகிறார் என்று ஒரு தகவல் அடிபட்டு வருகிறது.

கூடுதல் தகவலாக, அப்படத்தை ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போகிறது என்றும் செய்திகள் வந்தன. இதனை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மறுத்ததாகவும் கேள்வி.

இந்நிலையில் அகிரா படத்தைத் தொடர்ந்து, ஷாருக்கான் நடிக்கும் ஹிந்திப்படம் ஒன்றை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போவதாக செய்திகள் அடிபடுகிறது. இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.

இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா.. வதந்தியா... என்று சம்மந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்!


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions