
ஷாரூக் கானின் தில்வாலே படத்துடன், ரன்வீர் சிங்கின் பஜிராவ் மஸ்தானி படமும் ஒரேநேரத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. ரன்வீர் சிங், திபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள பஜிராவ் மஸ்தானி படம், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாவதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே ரன்வீர் சிங்கின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக, அவர் சூட்டிங்கில் பங்கேற்பதில் தடை ஏற்பட்டது. இதன்காரணமாக, படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ரன்வீர் சிங் நடிக்க உள்ள பகுதி, குறைவாகவே உள்ளதால், விரைவில் சூட்டிங் முடிக்கப்பட்டு, சொன்ன நேரத்தில் எவ்வித மாற்றமுமின்றி படம் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஷாரூக்கின் தில்வாலே படமும், ரன்வீர் சிங்கின் பஜிராவ் மஸ்தானி படமும் ஒரேநாளில் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.
Post your comment