என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்

Bookmark and Share

என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்

என் மனைவி எந்த வயதில் தாயானால் மற்றவர்களுக்கு என்ன வந்தது என்று நடிகர் ஷாஹித் கபூர் கேள்வி எழுப்பியுள்ளார். 

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருக்கு 35 வயதாகிறது. 21 வயதில் அவரின் மனைவி மீரா ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார். ஒரு சின்னப் பெண்ணை திருமணம் செய்து தாயாக்குவதா என்று நெட்டிசன்கள் அவரை விமர்சித்தனர். 

இதை பார்த்த ஷாஹித் கூறியிருப்பதாவது,

முக்கியமானவர்களை விமர்சித்து அதன் மூலம் முக்கியத்துவம் பெற நினைக்கும் மக்களை நான் கண்டுகொள்வது இல்லை. மீராவுக்கு இளம் வயதில் திருமணம் நடந்தது என்பதால் அவர் தனது அடையாளத்தை இழக்கவில்லை.

இன்று பெண்கள் தாங்கள் செய்ய விரும்புவதை எல்லாம் செய்கிறார்கள். அதை ஆண்களாகிய நாம் மதிக்க வேண்டும். வேலைக்கு செல்வது, வீட்டில் இருப்பது, தாயாவது என்பது பெண்களின் முடிவு.

என் மனைவி மீராவும், நானும் மகிழ்ச்சியாக உள்ளோம். நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து பிறரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். அதை விட்டு விமர்சிக்கக் கூடாது.

என் மனைவி வரும் முன்பு தான் வாழ்வில் தனிமையாக உணர்ந்தேன். ஆனால் தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என் மனைவி எப்பொழுது தாயாக வேண்டும் என்பதை அடுத்தவர்கள் சொல்லத் தேவையில்லை என ஷாஹித் கபூர் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே
மிலன் லுத்ரியா இயக்கத்தில் ஷாகித் கபூர்
பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் திருமண கோலாகலம்
ஜூலை 7-ல் ஷாகித் திருமணம்
ஷாகித் நடிக்கும் டொனேஷன் பாக்ஸ்
ஷாகித்தின் கருத்திற்காக ஏங்கும் ஸ்ரத்தா கபூர்
பாடகராக நடிக்கிறார் ஷாகித் கபூர்
ஷாகித் கபூருக்கு ஜூனில் திருமணம்
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஷாகித்-சைப்!
ஷாகித் - கென் கோஷ் இடையே மோதல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions