வெள்ள நிவாரணத்திற்கு ஷாருக்கான் 50 கோடி ? வியந்த பாலிவுட்

Bookmark and Share

வெள்ள நிவாரணத்திற்கு ஷாருக்கான் 50 கோடி ? வியந்த பாலிவுட்

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் சென்னையை வெளுத்து எடுத்து வரும் கனமழையால்,

தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

எனவே ஆங்காங்கே இருக்கும் மக்கள் தங்களால் முடிந்த உணவுகளயும், பண் மற்றும் பல உணவுப்பொருட்களை சென்னைக்கும் அதன் சுற்றியுள்ள பகுதிக்கும் அனுப்பிய வண்ணம் உள்ளனர். சினிமா நட்சத்திரங்களும், மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அனைவரையும் மிஞ்சும் வகையில் வரும் டிசம்பர் 12-ம் தேதி அன்று ஷாருக்கான்- கஜோல் நடிப்பில் வெளியாக உள்ள தில்வாலே படத்தின் முதல் நாள் கலெக்‌ஷனை சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்க உள்ளார். சாதாரணமாகவே ஷாருக்கான் படங்களுக்கு முதல் நாள் வசூல் மட்டும் 35 கோடி முதல் 45 கோடி வரை ஈட்டும்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான்- கஜோல் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று உள்ளது. எனவே எப்படியும் இப்படம் 50 கோடி வரை முதல் நாள் வசூல் பெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஷாருக்கானின் மனைவி என்பது குறிப்பிடதக்கது.


Post your comment





Related News
ஓகே கண்மணி ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் ஷாருக்கான்!
ஷாரூக் எதிர்பார்க்கும் லாபத்தை தருமா தில்வாலே...
ஷாருக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே சாதனை
புகழின் உச்சியில் இருந்தும் தனிமையில் உணர்கிறேன் - ஷாருக்கான் உருக்கமான பேச்சு!
புதிய ஐ.எஸ்.ஐ. தலைவருக்கும் நடிகர் ஷாரூக்கானுக்கும் என்ன 'தொடர்பு'?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions