ஷாருக்கானின் பண்ணை வீடு இடிப்பு: ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

Bookmark and Share

ஷாருக்கானின் பண்ணை வீடு இடிப்பு: ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்திரா, பேண்ட் ஸ்டாண்டு பகுதியில் உள்ள மன்னத் என்ற அழைக்கப்படும் பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஷாருக்கானுக்கு ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் கடற்கரை அருகே பண்ணை வீடு ஒன்று உள்ளது. 1 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சுவருடன் இந்த வீடு அமைந்து உள்ளது. மேலும் அங்கு பல்வேறு தொழில் அதிபர்களுக்கு சொந்தமான பங்களா வீடுகளும் உள்ளன. இந்த நிலையில், இங்குள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது.

இந்த புகாரை தொடர்ந்து அண்மையில் ராய்காட் மாவட்ட நிர்வாகம் நில அளவை மேற்கொண்டது.

இதில் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த இடத்தில் தான் நடிகர் ஷாருக்கானின் பண்ணை வீடும் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஷாருக்கானின் பண்ணை வீட்டை பொக்லைன் எந்திரம் கொண்டு ராய்காட் மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளியது.

கடந்த ஆண்டு மும்பையில் உள்ள அவரது மன்னத் பங்களா வீட்டின் வெளியே சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த கான்கிரீட் சரிவு பாதை இடித்து தள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது.


Post your comment





Related News
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
16 வருடத்துக்கு பிறகு அமீர்கான் செய்த செயல் - வியப்பில் பாலிவுட்
முன்னணி பாலிவுட் நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு அவமானமா?
ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல்- எப்படி தெரியுமா?
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
பிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா? முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
பாக். சென்சார் போர்டு சேட்டை: ஆணியே புடுங்க வேண்டாம் என்ற ஆமீர் 'தங்கல்' கான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions