ஷாருக்கானுக்கு மான் தோலில் ஷு தயாரித்த பாகிஸ்தானில் ரசிகர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்!

Bookmark and Share

ஷாருக்கானுக்கு மான் தோலில் ஷு தயாரித்த பாகிஸ்தானில் ரசிகர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் இந்தி நடிகர் ஷாருக்கானின் உறவினர் தங்கியுள்ளார். அவர் ஷாருக்கானுக்கு புகழ் பெற்ற பெஷாவர் ‘ஷு’ பரிசளிக்க முடிவு செய்தார்.

அதற்காக ‘ஷு’ தயாரிப்பாளர் ஜகாங்கீர்கான் என்பவரை சந்தித்து 2 ஜோடி ‘ஷு’க்கள் தயாரித்து தரும்படி கேட்டார். ஷாருக்கானுக்கு ‘ஷு’ ஆர்டர் கொடுத்ததை அறிந்த ஜகாங்கீர்கான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் ஷாருக்கானின் தீவிர ரசிகர் ஆவார்.

இவர் ஷாருக்கானுக்கு விசே‌ஷமாக மான்தோலில் ‘ஷு’ தயாரித்தார். இதை அறிந்த போலீசார் ஜகாங்கீர் கானின் தொழிற்சாலையை சோதனை நடத்தினர்.

அங்கு மான்தோலில் தயாரிக்கப்பட்ட ‘ஷு’ இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். கொல்லப்பட்ட வன விலங்குகளின் தோலில் இருந்து செருப்புகள் முதலான பொருட்கள் தயாரிப்பது குற்றமாகும்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜகாங்கீர்கானுக்கு அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions