கார் ஏறி விபத்து: காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஷாருக்கான்

Bookmark and Share

கார் ஏறி விபத்து: காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஷாருக்கான்

பிரபல இந்தி நடிகை அலியாபட் மும்பையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இதில் இந்தி நடிகர் ஷாருக்கானும் கலந்து கொண்டார். அவர் தனது சொகுசு காரில் விருந்து நடந்த இடத்துக்கு வந்தார். ஷாருக்கானை பத்திரிகை போட்டோகிராபர்கள் பலர் படம் பிடிக்க போட்டிபோட்டனர். 

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு போட்டோகிராபர் கால் மீது ஷாருக்கானின் கார் டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் வலியால் துடித்தார்.

ஷாருக்கான் உடனடியாக காரை விட்டு இறங்கி காயம் அடைந்த பத்திரிகை போட்டோகிராபரை தனது காரில் ஏற்றினார். அவரை தனது பாதுகாவலர்களுடன் அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். 


Post your comment





Related News
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
பிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா?
பெண் பாடிகார்டுகள் தான் வேண்டும் என அடம்பிடித்த நடிகர்: காரணம் இருக்கு பாஸு
ஷாருக்கானை போட்டோ எடுக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்! புகைப்படம் உள்ளே
அடுத்த வுல்வெரீனாக ஒரு இந்திய நடிகர்?
ஷாருக்கானிடம் 8 கோடி மோசடி செய்ததாக தயாரிப்பாளர் மீது புகார்!
தெறி ரீமேக்கில் நடிக்கும் ஷாருக்கான்?
வசூலில் ஷாருக்கானை ஓரங்கட்டிய விஜய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions