“சரிதா நாயர் கதையை படமாக்கவில்லை” - ஷாஜி கைலாஷ் திட்டவட்ட மறுப்பு..!

Bookmark and Share

“சரிதா நாயர் கதையை படமாக்கவில்லை” - ஷாஜி கைலாஷ் திட்டவட்ட மறுப்பு..!

சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி பிரபலமானவர் கேரளாவை சேர்ந்த சரிதா நாயர். சற்றும் பரபரப்புக்கு குறைவில்லாத இவர், சோலார் பேனல் பிசினசிற்காக தன்னை பலபேர் சீரழித்ததாக கூறி அதில் மோகன்லாலின் பெயரம் இருப்பதாக சொல்லி அதிரவைத்தவர்.

அப்படிப்பட்ட சரிதா நாயர் பற்றிய கதையை பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் படமாக்க இருப்பதாக கூறி இணையதளத்தில் செய்திகள் உலாவர, அதை பார்த்து கொதித்து போயுள்ளார் ஷாஜி கைலாஷ்.

“யாரோ சிறுபிள்ளைத்தனமாக பரப்பிவிட்ட வதந்தி இது. என் படத்தின் கதை என்னவென்று நான் தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர, பதிலாக யாரோ கிளப்பிவிட்ட வதந்தி அல்ல.. இன்னும் சிலர் நான், சரிதா நாயரை என் படத்தில் நடிக்க வைக்கப்போவதாக கூட செய்தியை பரப்பி வருகிறார்கள்.

இதில் எதுவும் உண்மையில்லை.. தற்போது தமிழில் 'வைகை எக்ஸ்பிரஸ்' படத்தை இயக்கிவரும் நான், அடுத்ததாக சுரேஷ்கோபியை போலீஸ் ஆபிசராக வைத்து மலையாளத்தில் படம் இயக்கவுள்ளேன்.. இது மட்டும் தான் உண்மை” என சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஷாஜிகைலாஷ் வாரிசு குறும்பட இயக்குநராக..
“பெங்களூர் டேய்ஸ்\'\' ரீமேக்கில் பார்வதியுடன் இன்னும் ஒரு ஒரிஜினல் நடிகர்..!
மகேந்திரன் - மனிஷாஜித் நடிக்கும் “விந்தை“
நுரையீரல் பாதிப்பால் டைரக்டர் கே.பாலசந்தரின் மகன் மரணம்
சரத்குமாரின் குழந்தையாக‌ நடித்த மனீஷாஜித் ஹீரோயினாகும் படம் -'நண்பர்கள் கவனத்திற்கு'!
பாலிவுட் நடிகை கரீனாகபூர், சயீப் அலிகான் திருமணம் அக்டோபர் 16!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions