திருமண வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை: ஷகிலா

Bookmark and Share

திருமண வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை: ஷகிலா

மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தவர் ஷகிலா. சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களை விட ஷகிலா படங்கள் அதிக நாட்கள் ஓடின. ஷகிலா படங்கள் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

இதனால் மலையாள நடிகர்கள் பயந்து ஷகிலா படங்கள் வரும்போது தங்கள் படங்களை வெளியிடாமல் தள்ளி வைத்தனர். தணிக்கை குழுவினர் திடீரென ஷகிலா படங்கள் ஆபாசமாக இருப்பதாக கெடுபிடி செய்தனர். சான்று அளிக்கவும் மறுத்தனர். இதையடுத்து அவர் சென்னைக்கு குடிபெயர்ந்தார். தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். 

ஷகிலா வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க தற்போது ஏற்பாடுகள் நடக்கிறது. ஏற்கனவே கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஷகிலா அளித்த பேட்டி வருமாறு:-

‘‘எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க கன்னட டைரக்டர் இந்திரஜித் லங்கேஷ் அனுமதி கேட்டார். நான் சம்மதம் சொல்லிவிட்டேன். என் சினிமா அனுபவங்கள், சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அனைத்தும் அதில் இருக்கும். அந்த படத்தில் எனது கதாபாத்திரத்தில் நடிக்க இந்தி நடிகைகள் சன்னிலியோன், பிபாசாபாசு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. 

மலையாளத்தில் நான் நடித்த போது நிறைய சம்பாதித்தேன். ரூ.4 கோடியில் தயாரான மம்முட்டி படத்தை விட என்னை வைத்து ரூ.15 லட்சம் செலவில் எடுக்கும் படங்கள் அதிகம் வசூலித்து சக்கைபோடு போட்டன. இதனால் எனக்கு எதிராக சதி செய்து அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள்.

சினிமாவில் நடித்து நான் சம்பாதித்த பணத்தை என் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஏமாற்றி பறித்து விட்டார். திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விட முடிவு செய்துள்ளேன். 

இவ்வாறு ஷகிலா கூறினார்.


Post your comment





Related News
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
புதுமுகங்களுடன், "செக்ஸ் பாம்" ஷகிலா முழுக்க, முழுக்க ...குடும்ப பாங்கில் நடிக்கும் "நீ.. நீ... நீதான் வேணும்!"
“உள்ளாடை தெரியுது…”என்ற சகிலா…ஓங்கி அறைந்த ஹீரோயின்…
அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’… ஷகீலா பட டைட்டிலாம்!
ஆபாச நடிகையுடன் ஒன்பது பேர் -ஆபாச பட வழக்கில் விடுதலை!
சனி பகவான் கோவில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங் : பக்தர்கள் அதிருப்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions