“உள்ளாடை தெரியுது…”என்ற சகிலா…ஓங்கி அறைந்த ஹீரோயின்…

Bookmark and Share

“உள்ளாடை தெரியுது…”என்ற சகிலா…ஓங்கி அறைந்த ஹீரோயின்…

சகிலாவுக்கு அறிமுகம் தேவை இல்லை. சகிலா படித்த பள்ளியில் தான் நடிகை சோனியாவும்,அவரது தம்பி டிங்குவும் படித்து கொண்டு இருந்தனர். அவர்கள் ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் நடித்திருந்ததால்…பயங்கர பேமஸ். படிப்பு சரியாக வராத சகிலாவுக்கு அப்படி ஒரு பிரபலம் அடைய வேண்டும் என்று சினிமா ஆர்வம் ஏற்பட்டதாம்.

கோடம்பாக்கம் தான் சகிலாவின் வீடு என்பதால்…சுத்தி இருந்த சினிமாகாரர்கள் சின்ன சின்ன ரோல்கள் தர, பெரிய படம் என்றால்…அது , சரத்குமார் நடித்த ‘நட்சத்திர நாயகன்’ படம். ஒரே ஒரு சீன் தான் சகிலா வருவார். ஆனால், அவருக்கு பல வாய்ப்புகளை இந்த ஒரு சீன் வாங்கி தந்தது.

“அதில் ரொம்ப முக்கியமானது….‘ப்ளே கேர்ள்ஸ்’ என்ற படம். அதில் சில்க் சுமிதாவுக்கு தங்கச்சி.கொஞ்சம் பருவம் வந்த வயது. முதல் நாள் ஷூட்டிங். காஸ்டியூம் கொடுத்தார்கள். ரொம்ப சின்னது. எனக்கு அதிர்ச்சி.

ஷாட் ரெடி. போய் சொன்னவுடன், மாடியில் இருந்து சில்க் இறங்கி வந்தார். அவருக்கு என்னைவிட சின்ன காஸ்டியூம். பயங்கர அதிர்ச்சியான நான், சில்க் என் பக்கத்தில் வந்தவுடன்,’உங்க உள்ளாடையெல்லாம் வெளிய தெரியுது அக்கா” என்று சொல்லிவிட்டேன்.

சில்க் கண்டும் காணாமல் போனார். கூட வந்த இயக்குனர்,’பெரிய ஸ்டார்க்கிட்ட என்ன பேசுறே? இப்படி பேசக்கூடாது.” என்று சொல்லிவிட்டார்.

சீனில் நான் காபி தர,சில்க் அறையவேண்டும். அப்படியே நான் செய்ய…சில்க் நிஜமாகவே ஓங்கி அறைந்துவிட்டார். வேணும்ன்னே அடிச்சிட்டார்ன்னு நான் கோபமாக ஷூட்டிங்குக்கு வரலை என்றுவிட்டேன்.

இயக்குனர் டைமிங் இருக்கு. அவங்க வேணும்ன்னு அடிக்கலைன்னு புரிய வைத்தாங்க. அப்புறம் நானும் சில்க்கும்    நண்பர்கள் ஆனோம்.என்னை வீட்டுக்கு அழைத்து லஞ்ச் கொடுத்தார். ஷூட்டிங்கில் எனக்காக நிறைய சாக்லேட் வாங்கி வந்து தருவார்.” என்று ஒரு பேட்டியில்  தன் வாழ்க்கை பற்றி சகிலா பகிர்ந்துகொண்டார்.

சின்ன ட்ரெஸ் போடறாங்கன்னு சில்க்கை சொன்ன சகிலா …கடைசியில்…எல்லா விதமான படங்களிலும் நடித்துவிட்டார் என்பது வாழ்க்கை …விசித்திரம் தானே..?


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions