எனக்கு இனிமேல் கல்யாணம் எதற்கு? குழந்தைகள் எதற்கு?: ஷகிலா விரக்தி

Bookmark and Share

எனக்கு இனிமேல் கல்யாணம் எதற்கு? குழந்தைகள் எதற்கு?: ஷகிலா விரக்தி

ஒரு காலத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களை மிஞ்சிய வசூல் சாதனை படங்களை கொடுத்த கவர்ச்சி நடிகை ஷகிலா தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் காமெடி மற்றும் வில்லியாக நடித்து வருகிறார்.

ஷகிலாவுக்கு திருமணம் என்ற செய்தி பலமுறை வந்து தடைபட்டு போயிருக்கிறது. கடைசியாக ரமேஷ் என்ற தே.மு.தி.க பிரமுகரை மணக்க இருப்பதாக சொன்னார். அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் ஷகிலா தான் இயக்கி வரும் கன்னடப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஒரு இளைஞனை திருமணம் செய்து கொண்டார் என்கிற செய்தி பரவியது.

இதுகுறித்து ஷகிலா கூறியதாவது:

என்னை பற்றி திருமண வதந்திகள் வருவது ஒன்றும் புதிதில்லை. பத்தோடு இதுவும் ஒன்று. அந்த பையன் என் படத்தில் ஹீரோவாக நடிக்கிறான். அவனுக்கு 28 வயதாகிறது. எனக்கு 38 வயதாகிறது அவன் என் தம்பி மாதிரி.

திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் எதுவும் எனக்கு இல்லை. சில தோழிகள் உனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் அதற்காகவாவது திருமணம் செய்து கொள் என்கிறார்கள்.

பூமிக்கு பாரமாக இன்னொரு உயிரை விட்டுச் செல்ல எனக்கு மனம் இல்லை. பெற்றால்தான் பிள்ளையா என்று சில குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். அது போதும் என்று விரக்தியாக கூறுகிறார் ஷகிலா.


Post your comment





Related News
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்!
ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
10 வருடத்திற்கு பிறகு மீண்டும் லீலையை ஆரம்பித்த ஷகிலா - புகைப்படம் உள்ளே.!
படவாய்ப்புக்காக அப்படி செய்ததில்லை – ஷகிலா பேட்டி!
ஷகிலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது!
கமலின் உதடு முத்தம் பிடிக்காது: ஷகிலா பேட்டி
திருநங்கை தத்தெடுத்த நடிகை
நடிகை ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்
உண்மையில் ஷகீலா பெண் தாதா!
ரவிக்குமார் இயக்கும் படத்தில் வில்லியாக நடிக்கும் ஷகிலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions