ஆக்சன் கதையில் ஷக்தி!

Bookmark and Share

ஆக்சன் கதையில் ஷக்தி!

தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், ஆட்டநாயகன் என சில படங்களில் நடித்தவர் ஷக்தி.

ஆனால் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் தொடர்ந்து மந்தமான நிலையிலேயே இருந்து வரும் ஷக்தி, கதயாலிது ஜீவிதம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இது.

ஒருவேளை இந்த படம் ஒர்க்அவுட்டாகி விட்டால் அடுத்தபடியாக மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தும் ஐடியாவும் வைத்திருக்கும் ஷக்தி, தற்போது தமிழில் படம பேசும் என்ற படத்தை அடுத்து தற்காப்பு என்றொரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஒருவன் தன்னைத்தானே தற்காத்துக்கொள்வது எப்படி என்பதை அடிப்படையாகக்கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் முதன்முதலாக ஆக்சன் ஹீரோவாக நடிக்கிறாராம் ஷக்தி.

இதற்கு முன்பு அவர் காதல் கதைகளில் மட்டுமே நடித்திருக்கும் நிலையில், இந்த படம் தனது கேரியரில் வித்தியாசமான படமாக இருக்கும் என்று கருதும் ஷக்தி, தற்போது தற்காப்பு படத்துக்காக பெங்களூரில் முகாமிட்டு நடித்துக்கொண்டிருக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions