நெகட்டிவ் ரோல்களில் நடிக்க ஆசைப்படும் புதுக்கவிதை ஷாலினி!

Bookmark and Share

நெகட்டிவ் ரோல்களில் நடிக்க ஆசைப்படும் புதுக்கவிதை ஷாலினி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான புதுக்கவிதை என்ற தொடரில் ரக்சனா என்ற கேரக்டரில் நடித்தவர் ஷாலினி. ஒரே கேரக்டரில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டுவிதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் அந்த தொடர் அவரை பெரிதாக பேச வைத்தது.

அதோடு பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வரும் ஷாலினி ஏற்கனவே சில படங்களில் நடித்தவர், நல்ல வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து சின்னத்திரை- சினிமா என இருவழிப்பாதையில் பயணிக்க தயாராக உள்ளாராம்.

இதுபற்றி அவர் கூறுகையில், நான் செலக்டிவான சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறேன். நிறைய சீரியல்களில் நடிக்க வேண்டும் என்பதைவிட நடிக்கிற ஒவ்வொரு சீரியல்களிலும் நான் நடிக்கிற கேரக்டர்கள் பேசப்படவேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக உள்ளது. அந்த வகையில் நான் நடித்ததில் புதுக்கவிதை என்னை பெரிதாக பேச வைத்தது.

அதேபோல், காமெடியில் கலக்குவது எப்படி என்ற நிகழ்ச்சியில் பல வேடங்களில் நடித்திருக்கிறேன். அதில் எனக்குப்பிடித்த நயன்தாராவைப் போன்று ஒரு எபிசோடில் நடித்தேன். அதை பலரும் பாராட்டினர். அதனால் இப்போது காமெடி கேரக்டர்களிலும் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். என்றபோதும், நெகடீவ் ரோல்களே எனது முக்கிய டார்கெட்டாக உள்ளது.

காரணம், பாசிட்டீவான கேரக்டர்களில் நடிக்க ஒரு வரையறை இருக்கும். ஆனால் நெகட்டிவ் வேடங்களுக்கு அப்படியல்ல. டைரக்டர்கள் கொடுக்கிற எல்லையை மீறிகூட நடிக்கலாம்.

அதோடு அந்த கேரக்டருக்கு பலம் சேர்க்கும் வகையில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நெகட்டிவ் பர்பார்மென்ஸை கொடுக்கலாம். இந்த மாதிரி நடிக்கும்போது பெண்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் இருக்கும். என்றாலும், நடிக்கிற நமக்கு திருப்தி கிடைக்கும் என்கிறார் ஷாலினி.

மேலும், டிவியைப்போலவே சினிமாவிலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படும் ஷாலினி, தேவைப்பட்டால் கிளாமராகவும் நடிப்பாராம். ஆனால் அதில் லிமிட் தாண்ட மாட்டாராம். அதேபோல் அயிட்டம் பாடல்களுக்கு நடனமாடும் ஆசையும் இல்லையாம்.


Post your comment





Related News
தல அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்..!
மனைவியுடன் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய அஜித்
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
ஜீவா ஷாலினி பாண்டே இணையும் புதியபடம்
ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டேவின் 100 % காதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
மெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
ஷாலினியுடனான அஜித்தின் காதலுக்கு இந்த சம்பவமே காரணம்! காதல் ஸ்பார்க்
அஜித், ஷாலினி திருமண நாளில் அவர்களுக்கு இப்படி ஒரு சோகமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions