பில்டப் கொடுத்த நடிகை ஷாலு!

Bookmark and Share

பில்டப் கொடுத்த நடிகை ஷாலு!

தமிழில் சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருப்பவர் ஷாலு. இவர் தற்போது வெளியாகியுள்ள தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்ற படத்தில் காமெடியன் சதீசுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.  

அந்த படத்தைப்பொறுத்தவரை நகுல், தினேஷ், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா என இரண்டு ஜோடி கதைதான். மற்றபடி காமெடியன் சதீஷ் ஒரு கால் டாக்சி டிரைவர் வேடத்தில் நடித்திருக்கிறார்.

அவரது ட்ராக்கில்தான் சில காமெடி காட்சிகளில் இந்த ஷாலு நடித்துள்ளார். ஆனால், அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது புதிய படவேட்டையில் ஈடுபட்டிருந்த ஷாலு, அந்த படத்தில் பிந்துமாதவி, ஐஸ்வர்யா தத்தா என்ற இருவர் இருந்தபோதிலும் நானும் ஒரு ஹீரோயினியாகத்தான் நடித்துள்ளேன் என்று கோடம்பாக்க டைரக்டர்களிடம் கூறி வந்திருக்கிறார்.

மேலும், எனக்கும் சதீசுடன் பாடல் காட்சிகூட உள்ளது என்றும் சில கம்பெனிகளுக்கு சென்றபோது பில்டப் கொடுத்து வந்தாராம் ஷாலு. ஆனால், இப்போது அப்படம் திரைக்கு வந்து விட்டதை அடுத்து அவருக்கு நெருக்கமானவர்கள் காமெடி கேரக்டரில்தானே நடித்திருக்கிறீர்கள். இதை எப்படி இன்னொரு ஹீரோயினி என்று சொல்ல முடியும்? என்று அவரிடம் கேட்கிறார்களாம்.

அதற்கு, படத்தில் நடித்துள்ள பிந்துமாதவி, ஐஸ்வர்யா தத்தாவுக்கு இணையாக எனக்கும் காட்சிகள் உள்ளது. அதோடு படத்தில் ரிலாக்ஸ் என்றாலே நானும் சதீசும் நடித்த காட்சிகள்தான்.

என்ன பாடல் மட்டும்தான் எங்களுக்கு இல்லை. மற்றபடி மூன்றாவது ஹீரோ- ஹீரோயினி என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்குத்தான் எங்களது கேரக்டர்கள் அமைந்துள்ளது என்று இன்னும் அடித்து சொல்கிறாராம் ஷாலு.

அதுமட்டுமின்றி, இதையடுத்து கதாநாயகியாக நடிப்பதற்காக சில பட்ஜெட் பட கம்பெனிகளையும் முற்றுகையிட்டு வரும் ஷாலு, தேவைப்பட்டால் கிளாமர் காட்சிகளிலும் கலக்கி எடுப்பாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions