சிம்ரன் முதல் மனிஷா கொய்ராலா வரை ஷாமின் ஹீரோயின் ராசி!

Bookmark and Share

சிம்ரன் முதல் மனிஷா கொய்ராலா வரை ஷாமின் ஹீரோயின் ராசி!

ஷாமின் 25-வது படமான புறம்போக்கு என்கிற பொதுவுடைமை  பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த மகிழ்ச்சியில் தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தபோது வெற்றிபெற்ற ஹீரோயின் நடிகைகள் பலரும் ஷாமுடன் ஆரம்ப காலத்தில் அறிமுகமானவர்கள் அல்லது  உடன் நடித்திருப்பவர்கள் என்றே இருக்கிறார்கள்.

சிம்ரனும்,  ஜோதிகாவும், ஷாமுடன் 12 பி-யில் நடித்தவர்கள். த்ரிஷா, லேசா லேசாவில் புதுமுக நடிகை. அஸின் உள்ளம் கேட்குமே வில் சேர்ந்து நடித்தார். ப்ரியாமணி தெலுங்கில் ஷேத்ரம் படத்தில் நடித்தவர். சினேகாவும் ஷாமுடன் 3 படங்கள் நடித்தவர்.

மீரா ஜாஸ்மின், சந்தியா, லைலா, பூஜா, பூனம்கவுர் என இந்தப்பட்டியல் நீளும். இந்த வரிசை மனிஷா கொய்ராலா வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது. ஷாமுக்கு மனிஷா ஜோடியா என அதிர வேண்டாம். ஆமாம் உண்மைதான். ஒரு மெல்லிய கோடு படத்தில் ஷாமும் மனிஷாவும் ஜோடி.

கதைப்படி ஷாமைவிட மனிஷா ஏழுவயது மூத்தவர். இருவருக்குள் காதல் வருகிறது. ரசிகர்களுக்கு இது ஒரு புது அனுபவம் தான். தன் ஹீரோயின்கள் பற்றி ஷாம் கூறும் போது பெருமைப்படுகிறார் என்னுடன் அறிமுகமான நடிகை ப்ரியாமணி வளர்ந்து தேசிய விருது பெறுகிறார் இந்தியில் அஸின்  கலக்குகிறார்.

 திருமணத்துக்குப் பிறகும் ரீ-என்ட்ரியில் ஜோதிகா கலக்குகிறார், டிவி நிகழ்ச்சி தயாரிப்பில் கலக்குகிறார் சிம்ரன். என்னுடன் நடித்தவர்கள் எப்படியாவது பேசப்படுகிறார்கள். நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது." என்கிறார் ஷாம்.

 


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
அஜித் படங்களை பிடிக்காது, ஆனால் - ரசிகர்களை கடுப்பாக்கிய சின்னத்திரை நடிகை.!
சின்னத்திரை நடிகை ஷாமிலிக்கு ரகசியத் திருமணமா? - வைரலாகும் புகைப்படம்.!
பாண்டவர் பூமி ஷமிதாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
காவியன் படப்பிடிப்பு தளத்தில் துப்பாக்கி சூடு.
அஜித் ஜோடியாக நடிப்பீர்களா? வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி!
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions