ஹாலிவுட்டில் கோலிவுட்!

Bookmark and Share

ஹாலிவுட்டில் கோலிவுட்!

“2M cinemas” K.V. சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம் “கா-வியன்”. இப்படம் முழுக்க முழுக்க பிரம்மிப்பின் தலைநகரமான அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) 45 நாட்கள் படமாக்கப்படவுள்ளது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்புக்கான பணிகள் தற்போது அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” நடைபெற்று வருகிறது. ஷாம், ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள்.

மேலும் கோலிவுட் மற்றும் ஹாலிவுட்டை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்ற உள்ளார்கள். N.S. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவில் நவி சதிஷ்குமார் வசனத்தில் ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

மேலும் சண்டைப்பயிற்சி – STUN சிவா, நடனம் – விஷ்ணு தேவா, கலை – ஜான் பிரிட்டோ, நிர்வாக தயாரிப்பு – கணேஷ் குமார் ( Las Vegas) என மிக பிரம்மாண்டமான தொழில்நுட்ப கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.

முழுக்க முழுக்க அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுவே ஆகும்.

 

 


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
அஜித் படங்களை பிடிக்காது, ஆனால் - ரசிகர்களை கடுப்பாக்கிய சின்னத்திரை நடிகை.!
சின்னத்திரை நடிகை ஷாமிலிக்கு ரகசியத் திருமணமா? - வைரலாகும் புகைப்படம்.!
பாண்டவர் பூமி ஷமிதாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
காவியன் படப்பிடிப்பு தளத்தில் துப்பாக்கி சூடு.
அஜித் ஜோடியாக நடிப்பீர்களா? வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி!
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions