லேட்டாக அறிமுகமானாலும் லேட்டஸ்ட்டாக வரும் ஷாமிலி

Bookmark and Share

லேட்டாக அறிமுகமானாலும் லேட்டஸ்ட்டாக வரும் ஷாமிலி

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அஜித் மனைவி ஷாலினியின் தங்கையான ஷாமிலி நடிக்க உள்ளார். 

இவர் இரண்டு வயதிலேயே அஞ்சலி படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். 

தொடர்ந்து இராம.நாராயணன் இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் ஷாமிலி. டீன் ஏஜ் வயதில் அக்கா ஷாலினி போலவே ஷாமிலியும் நாயகியாக அறிமுகமாக தமிழ்த் திரையுலகத்தை ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்த்தனர். 

தெலுங்கில் சித்தார்த் ஜோடியாக ஓய் என்ற படத்தில் 2009ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானார். அப்போதே தமிழிலும் நாயகியாக அறிமுகமாவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், ஷாமிலி நாயகியாக அறிமுகமாகாமல் படிப்பதற்காக வெளிநாடு சென்று விட்டார். இப்போது ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

தனுஷுடன் ஜோடியாக நடிக்க உள்ள படம் மூலம்தான் தமிழில் ஷாமிலி நாயகியாக அறிமுகமாகப் போகிறார். மம்முட்டி, அஜித், அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு நடித்த கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம்தான் ஷாமிலி தமிழில் கடைசியாக நடித்த படம்.  லேட்டாக அறிமுகமானாலும் ஷாமிலி லேட்டஸ்ட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Post your comment





Related News
அஜித் ஜோடியாக நடிப்பீர்களா? வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி!
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி
லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த அஜித்தின் மச்சினி!
தங்கைக்காக கதை கேட்கும் ஷாலினி!
மீண்டும் அஞ்சலியாக நடிக்கும் ஷாம்லி!
லேட்டாக களத்தில் இறங்கிய ஷாமிலி!
விஜய்யின் தீவிர ரசிகையான அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி
அந்த விஷயத்தில் யாரும் அஜித்தை பீட் பண்ண முடியாது – ஷாமிலி
அஜித் ஒரு “பாசமலர்” மச்சினிச்சி ஷாம்லி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions