ஷாமிலிக்கு போட்டோஷூட் நடத்தும் அஜித்

Bookmark and Share

ஷாமிலிக்கு போட்டோஷூட் நடத்தும் அஜித்

மணிரத்னம் இயக்கத்திலான அஞ்சலி படத்தின் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் ஷாமிலி. இரண்டரை வயதிலேயே தனது தத்ரூப நடிப்பின் மூலம், இன்றளவும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர். 

அதற்கு பிறகு, 10க்கும் மேற்பட்ட படங்களில், ஷாமிலி நடித்துள்ளார். ஷாமிலி, டோலிவுட்டில், ஓய் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாவர். பின் அவர் மேற்படிப்பு படிப்பதற்காக, வெளிநாடு சென்றுவிட்டார்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து, படிப்பை முடித்து மீ்ண்டும் ஷாமிலி இந்தியா திரும்பியுள்ளார். படங்களிலும் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ளார். 

தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் மற்றும் விக்ரம்பிரபுவிற்கு ஜோடி என 2 படங்களில் நடிக்க ஷாமிலி ஒப்பந்தமாகியுள்ளார்.

அக்கா ஷாலினியைப் போன்றே, ஷாமிலியும் குடும்பப்பாங்கான கேரக்டர்களிலேயே நடிக்க திட்டமிட்டுள்ளாராம். ஷாமிலியின் இந்த முடிவிற்கு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அஜித்தும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அஜித் சிறந்த புகைப்படக்கலைஞர் என்பது அப்புக்குட்டி (என்ற) சிவபாலன் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசனின் போட்டோஷூட் சான்றாகும்.  தற்போது, ஷாமிலிருக்கும் போட்டோ சூட் செய்துள்ளார். 

இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர், அஜித்தின் ரசிகைகளாக இருக்க, ஷாமிலியோ, ஷாரூக் கானின் தீவிர ரசிகையாம்!!!!


Post your comment





Related News
அஜித் ஜோடியாக நடிப்பீர்களா? வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி!
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி
லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த அஜித்தின் மச்சினி!
தங்கைக்காக கதை கேட்கும் ஷாலினி!
மீண்டும் அஞ்சலியாக நடிக்கும் ஷாம்லி!
லேட்டாக களத்தில் இறங்கிய ஷாமிலி!
விஜய்யின் தீவிர ரசிகையான அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி
அந்த விஷயத்தில் யாரும் அஜித்தை பீட் பண்ண முடியாது – ஷாமிலி
அஜித் ஒரு “பாசமலர்” மச்சினிச்சி ஷாம்லி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions