அக்காவின் பாணியில் ஷாம்லி!

Bookmark and Share

அக்காவின் பாணியில் ஷாம்லி!

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி, ஹீரோயினியாகவும் அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும், காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம் என பல படங்களில் நடித்தார்.

அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித்துடன் காதல் மலர்ந்ததை அடுத்து, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதனால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வரவேண்டிய ஷாலினி சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி விட்டார்.

இந்த நிலையில், தான் விட்டுச்சென்ற இடத்தை தனது தங்கை ஷாமிலியை வைத்து பிடித்து விட வேண்டும் என்று நினைக்கும் ஷாலினி, அவருக்கான கதைகளை பல மாதங்களாக கேட்டு வந்தார். 

இந்த நிலையில் விக்ரம்பிரபு நடிக்கும் வீரசிவாஜி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் என இரண்டு படங்களை தற்போது தங்கைக்காக ஓகே பண்ணியிருக்கிறார்.

இதில் வீரசிவாஜி படம் காதலுக்கு மரியாதை போன்று கவித்துவமான காதல் கதையாம். அதனால் அந்த படத்தில் ஷாம்லி நடிப்பில் ஸ்கோர் பண்ண நிறைய வாய்ப்புகள் உள்ளது.

என்பதால், ரொமான்ஸ் காட்சிகளில் எந்தெந்த மாதிரி நடிக்க வேண்டும் என்று அந்த ஸ்கிரிப்ட்டை கையில் வைத்துக்கொண்டு தங்கைக்கு டீச்சிங் செய்து வருகிறாராம் ஷாலினி. 

அக்காவின் பாணி நடிப்புக்கு பெரிய வரவேற்பு இருந்தது என்பதால், அவர் பாணியில் நடித்து மார்க்கெட்டை பிடிக்கப்போகிறாராம் ஷாம்லி. 


Post your comment





Related News
அஜித் ஜோடியாக நடிப்பீர்களா? வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி!
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி
லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த அஜித்தின் மச்சினி!
தங்கைக்காக கதை கேட்கும் ஷாலினி!
மீண்டும் அஞ்சலியாக நடிக்கும் ஷாம்லி!
லேட்டாக களத்தில் இறங்கிய ஷாமிலி!
விஜய்யின் தீவிர ரசிகையான அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி
அந்த விஷயத்தில் யாரும் அஜித்தை பீட் பண்ண முடியாது – ஷாமிலி
அஜித் ஒரு “பாசமலர்” மச்சினிச்சி ஷாம்லி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions