தனுஷை மாற்றிய 'ஷமிதாப்'

Bookmark and Share

தனுஷை மாற்றிய 'ஷமிதாப்'

ஒரு படத்தை எப்படி பிரமோஷன் செய்ய வேண்டும், எப்படி விளம்பரப்படுத்த வேண்டும், எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை ஹிந்தித் திரையுலகத்தினரிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

'சென்னை எக்ஸ்பிரஸ், தூம் 3, ஹேப்பி நியூ இயர்'  ஆகிய படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னையில் கூட நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அவர்கள் படங்களை எப்படி கொண்டு சேர்க்கிறார்கள் என்று.

சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் கூட அடிக்கடி கேரளா பக்கம் சென்றும் அவர்களது தமிழ்ப் படங்களின் பிரமோஷன்களை நிகழ்த்தி வருகிறார்கள். ஆனாலும், அஜித் போன்று தன்னுடைய படத்தைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

'ஷமிதாப்' படத்திற்காக தனுஷ் இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கும், வெளிநாடுகளிலும் அந்தப் படத்தின் பல பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தன்னை ஒரு இந்திய நடிகராக வெளிக்காட்டிக் கொள்ள நிறையே பிரயத்தனப்பட்டார்.

ஆனால், அவரை வட இந்திய ஊடகங்கள் ஒரு தமிழ் நடிகராகவே பார்த்து வருகின்றன. இருந்தாலும் தனுஷின் நடிப்பும் படத்தில் மிரள வைத்துள்ளதால் பல 'கான்' நடிகர்களே மிரண்டு போயிருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

'ஷமிதாப்'  படத்தின் பிரமோஷன் யுத்தியையே தனுஷ் தற்போது அவர் நடித்து இந்த வாரம் வெளிவரவிருக்கும்  'அனேகன்' படத்திற்கும் பயன்படுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் கொச்சி சென்ற டீம், இன்று ஐதராபாத் சென்றுள்ளது.

தெலுங்கில் 'அனேகன்' படம் 'அனேகடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. தொடர்ந்து அனைத்து மீடியாக்களுக்கும் தனுஷ் 'அனேகன்' படத்திற்காக இங்கும் பேட்டி தருவாரா என்று பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் தமிழ் பத்திரிகையாளர்கள், மீடியாக்களுடன் சகஜமாகப் பேசிப் பழகி வந்த தனுஷ் தற்போது விலகியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions