தீவிர டிஸ்கஷனில் ஷங்கர் படம்...!

Bookmark and Share

தீவிர டிஸ்கஷனில் ஷங்கர் படம்...!

இயக்குனர் ஷங்கர் 'ஐ' படத்திற்குப் பிறகு இதுவரை அவருடைய அடுத்த படத்தைப் பற்றிய எந்த தகவலையும் வெளியிடாமல் இருக்கிறார். 'ஐ' படம் வெளிவந்து சுமார் ஐந்து மாதங்களாகிவிட்டன.

அடுத்து அவர் ரஜினிகாந்தை வைத்து 'எந்திரன் 2' படத்தை இயக்கப் போகிறார் என்று கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ரஜினிகாந்த் அடுத்ததாக பா.ரஞ்சித் படத்தில் நடிக்கிறார் என அறிவிப்பும் வந்து விட்டது.

எப்படியும் அந்தப் படம் முடிய இன்னும் ஆறு மாதங்களாகிவிடலாம். அதற்குப் பிறகுதான் ரஜினிகாந்தாலும் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க முடியும். அப்படியென்றால் அந்தப் படம் ஆரம்பமாகவே 2016 ஆகிவிடும்.

'எந்திரன் 2' படத்தை அவர்கள் எடுப்பதென்றால் அதை எடுத்து முடித்து வெளியிட 2017 ஆகி விடும். இதனிடையே ஷங்கரின் அடுத்த பட டிஸ்கஷனில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகனும்  இடம் பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்கள் முன் அவர் எழுதிய ஒரு பதிவில் அது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். ஆக, ஷங்கர் அலுவலகத்தில் அவருடைய அடுத்த படம் பற்றிய டிஸ்கஷன் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது இதிலிருந்து தெரிகிறது.

அதே சமயம், ஷங்கர், ரஜினிகாந்துக்குப் பதிலாக 'எந்திரன் 2' படத்தில் நாயகனாக நடிக்க கமல்ஹாசனை அணுகினார் என்றும், அதற்கு கமல் மறுப்பு தெரிவித்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

முதலில், இந்தப் படத்தில் கமலிடம் வில்லனாக நடிக்கக் கேட்டார்கள் என்று கூட செய்திகள் வெளியாகின. கமல்ஹாசன் 'தூங்காவனம்' படத்தையடுத்து ஹிந்தியில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள்.

அதனால்தான் அவர் 'எந்திரன் 2' வாய்ப்பை வேண்டமென்றார் என்கிறார்கள். ஷங்கர் - ரஜினிகாந்த் இணையும் 'எந்திரன் 2' படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions