ஹாலிவுட் டெக்னீசியன்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஷங்கர்!

Bookmark and Share

ஹாலிவுட் டெக்னீசியன்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஷங்கர்!

அந்நியனைத் தொடர்ந்து மீண்டும் விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்கிய ஷங்கர் அதையடுத்து எந்திரன்-2 படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும் வேலைகளில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

அதோடு முந்தைய படங்களை முறியடிக்கும் வகையில் இன்னும் பிரமாண்டமாக புதிய படத்தை இயக்க நினைக்கும் அவர், கதை வேலைகள் மட்டுமின்றி டெக்னிக்கல் ரீதியாக என்னென்ன புதுமைகளை செய்யலாம் என்பது குறித்தும் சில ஹாலிவுட் டெக்னீசியன்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, அந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்த ரஜினிதான் நாயகனாக நடிக்கிறார் என்பது முடிவாகி விட்ட நிலையில், படத்தை அதிக பட்ஜெட்டில் இயக்குவதால் இந்திய அளவில் வியாபாரமுள்ள ஒரு நடிகரை வில்லனாக நடிக்க வைக்கும் முயற்சியும் திரைக்குப்பின்னால் நடந்து கொண்டிருக்கிறது.

அது சம்பந்தமாக பாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான ராஜமவுலியின் பாகுபலி படமும் ஷங்கருக்கு பெரிய சவாலாகியிருக்கிறது.

இதுவரை இந்திய அளவில் பிரமாண்ட படங்களை கொடுக்கக்கூடியவர் ஷங்கர்தான் என்று இருந்த நிலை மாறி, இப்போது ராஜமவுலி அந்த இடத்தை பிடித்து விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

அதனால் எந்திரன்-2 படத்தை இதுவரை தனது படங்கள் இல்லாத அளவுக்கு அதிரடியான பிரமாண்டத்தை புகுத்தவும் ஷங்கரின் கதை இலாகா தீவிர யோசனையிலும் ஈடுபட்டிருக்கிறது. 


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions