ரகசிய கதை விவாதத்தில் இயக்குனர் ஷங்கர்

Bookmark and Share

ரகசிய கதை விவாதத்தில் இயக்குனர் ஷங்கர்

எந்திரன் 2 படத்திற்காக ரஜினிகாந்துடன் மீண்டும் இணைய உள்ள ஷங்கர் தீவிரமான ரகசிய கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கரின் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாகவே அந்தப் படத்திற்கான கதை உருவாக்க முயற்சியில் எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட ஷங்கரின் உதவி இயக்குனர்கள் பலர் ஈடுபட்டிருந்தனராம்.

இப்போது கதை விவாதம் முழுமையாக உருப்பெறும் விதத்தில் அனைவரது தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று ரகசியமான ஒரு இடத்தில் கதை விவாதம் நடந்து வருகிறதாம்.

ஷங்கர், எழுத்தாளர் ஜெயமோகன், உதவி இயக்குனர்கள் உட்பட பலர் அதில் கலந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பொதுவாக தன் படங்களின் கதை விவாதங்களில் ரஜினிகாந்தும் கலந்து கொள்வார். கடைசியாக வெளிவந்த லிங்கா படத்திலும் கே.எஸ்.ரவிக்குமாருடனும் ரஜினிகாந்த் விவாதத்தில் கலந்து கொண்டார்.

ஆனால், ஷங்கர் போன்ற இயக்குனர்களுடன் ரஜினிகாந்த் இதுவரை கதை விவாதத்தில் கலந்து கொண்டதாக எந்தத் தகவலும் இல்லை. இதனிடையே பா.ரஞ்சித் இயக்க உள்ள படத்தின் கதை விவாதத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருக்கலாம் என்றும் அந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் முழுமையான பிறகு அவர் ஷங்கரிடம் மொத்த கதையையும் கேட்பார் என்றும் சொல்கிறார்கள்.

அடுத்தடுத்து இரண்டு வித்தியாசமான படங்களில் ரஜினிகாந்தைப் பார்க்கப் போவது மட்டும் உறுதி என்று கோலிவுட்டில் செய்தி பரவிக் கிடக்கிறது.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions