ஷங்கரிடம் 27 உதவி இயக்குனர்களா?

Bookmark and Share

ஷங்கரிடம் 27 உதவி இயக்குனர்களா?

தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்து ரஜினிகாந்தை வைத்து இயக்கும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக கடந்த சில மாதங்களாகவே ஷங்கர், எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட பல உதவி இயக்குனர்கள் கதை விவாதங்களை நடத்தி வருகிறார்கள். ஷங்கரின் எந்திரன் இரண்டாம் பாகத்தில் அவர் 27 உதவி இயக்குனர்களுடன் பணி புரியப்போவதாக ஒரு செய்தி கடந்த சில நாட்களாக உலா வந்தது. 

ஆனால், அப்படி என்னிடம் அவ்வளவு உதவி இயக்குனர்கள் இல்லை என்று சொல்லும் விதமாக நோ என ஒற்றை வார்த்தையில் பதிலளித்திருக்கிறார் ஷங்கர். இது தொடர்பாக இயக்குனர் ஷங்கரிடம் ரசிகர் ஒருவர், “27 உதவி இயக்குனர்கள், உண்மையா?” என்று கேட்டார். அதற்கு இயக்குனர் ஷங்கர் நோ என ஒரே வார்த்தையில் பதிலளித்திருக்கிறார். 

ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க ரஞ்சித் இயக்க உள்ள படம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கும் எந்திரன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.

ரஜினிகாந்த் தவிர மற்ற நடிகர்களைத் தேர்வு செய்யும் பணியும் மறுபக்கம் நடந்து வருகிறதாம். எப்படியும் இந்த வருடக் கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாகி 2017ம் ஆண்டில் படம் வெளிவந்துவிடும் என்று தெரிகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions