ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்

Bookmark and Share

ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்

பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கர் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். மிக அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை எதிர்ப்பார்த்து மொத்த திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து ஏற்கனவே எடுத்திருந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். இதிலும் கமலே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

தற்போது 2.0-வையும் விட்டு இந்த படத்திலே ஷங்கர் முழு மூச்சாக இறங்கியுள்ளார். கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் அவரை தவிர்த்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் தற்போது பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது படத்தின் ஹீரோயின் நயன்தாரா படத்தில் நடிப்பதற்கு கடும் நிபந்தனைகளை விதிக்கிறாராம்.

நீச்சல் உடையில் நடிக்கமாட்டேன், முத்தக்காட்சியில் நடிப்பது என்றால் முன் கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் இதற்கெல்லாம் சம்மதித்து தயாரிப்பாளர்களும் இயக்குனரும் கையெழுத்து போட்டால் மட்டுமே நடிப்பது பற்றி முடிவு செய்வாராம் .


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions