சங்கருக்கு அடுத்து நான்: ராஜமௌலி

Bookmark and Share

சங்கருக்கு அடுத்து நான்: ராஜமௌலி

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஜூலை மாதம் 10-ம்தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.

பாகுபலி படம் பிரம்மாண்டமாக உருவாகியிருப்பதால், தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று கூறப்படும் சங்கரை மிஞ்சி விட்டதாக கூறுப்படுகிறது. இதனை இயக்குனர் ராஜமௌலி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘சங்கர் புதிய தொழில்நுட்பத்தில் படத்தை இயக்கும்போது, எனக்கு கிரின் மேட் என்னும் தொழில்நுட்பம் கூட அறியாமல் இருந்தேன். அவரிடம் என்னை ஒப்பிட்டு பேசாதீர்கள். சங்கருக்கு அடுத்து ராஜமௌலி என்று சொன்னால் கூட அந்தளவிற்கு உயர்ந்து விட்டேன் என்று சந்தோஷப்படுவேனே தவிர, ராஜமௌலிக்கு அடுத்து சங்கர் என்று கூறினால் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றார்.

இப்படத்தில் நடித்த நடிகர்கள் இயக்குனர் ராஜமௌலி பற்றி கூறும்போது, ‘‘இப்படத்தில் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வருவதற்காக படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாகவே அனைவரும் 6 மாத காலமாக வாள் சண்டை, சிலம்பம், குதிரை பயிற்சி என போருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் கொடுத்து எங்களை இயக்குனர் ராஜமௌலி தயார் செய்தார்.

அவரே ஒவ்வொரு காட்சியை படமாக்குவதற்கு முன்னதாகவே அவரே அந்த காட்சி நடித்து பார்ப்பார். தண்ணீரில் கேமரா எடுக்க வேண்டும் என்றால் கேமரா மேனுக்கு முன்னதாகவே ராஜமௌலி சென்று அதை எடுக்க முடியுமா என்று பார்ப்பார்.

ஒவ்வொரு காட்சியை நடிப்பதற்கு நாங்கள் கஷ்டப்பட்டதைவிட இயக்குனர் அதைவிட அதிகமாகவே கஷ்டப்பட்டிருக்கிறார். எங்களிடம் அழகாக வேலையை வாங்கினார். இவர் சிறந்த இயக்குனர் என்று அனைத்து நடிகர்களும் புகழாராம் சூட்டினர்.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions