ஷங்கரை 'ஓவர் டேக்' செய்த ராஜமௌலி

Bookmark and Share

ஷங்கரை 'ஓவர் டேக்' செய்த ராஜமௌலி

இந்தியாவின் தற்போதைய சிறந்த இயக்குனர்களில் தென்னிந்தியாவிலிருந்து இருவர் கண்டிப்பாக குறிப்பிடப்படுவர், அவர்களில் ஒருவர் ஷங்கர், இன்னொருவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இருவருமே பிரம்மாண்டமானப் படங்களின் மூலமும் அவர்களுடைய கிரியேட்டிவிட்டி மூலமும் பேசப்பட்டு வருபவர்கள். ரஜினிகாந்த் கூட ராஜமௌலியின் இயக்கத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூட சமீபத்தில் பேசியிருந்தார்.

ஷங்கருடன் இணைய தெலுங்கில் பல முன்னணி நடிகர்களும் தயாராக காத்திருக்கிறார்கள். இருவருமே இன்றைய இளம் ரசிகர்கள் பலரைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அந்த விஷயத்தில் இயக்குனர் ராஜமௌலி, ஷங்கரை ஓவர் டேக் செய்துவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் ராஜமெளலி மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். அவருடைய படத்தைப் பற்றியும் இன்னும் சில விஷயங்களைப் பற்றியும் ஏதாவது ஒரு பதிவு போட்டுக் கொண்டேயிருப்பார்.

அதனால் அவரை சமூக வலைத்தளங்களில் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல லட்சத்தைப் பெற்றிருக்கிறது.பேஸ்புக்கில் ராஜமௌலியை 26 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்கிறார்கள். டிவிட்டரில் நேற்றுதான் 10 லட்சத்தைக் கடந்தார் ராஜமௌலி. ஆனால், ஷங்கருக்கு பேஸ்புக்கில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்தான் தொடர்கிறார்கள். டிவிட்டரில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களே தொடர்கிறார்கள்.

ஒரு இயக்குனருக்கு சில முன்னணி நடிகர்களைப் போல அதிகம் பேர் தொடர்பாளர்களாக இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். அந்த சாதனையை ராஜமௌலி படைத்திருக்கிறார்.

அவருடைய இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் 'பாகுபலி' படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனோ, தமிழ் நட்சத்திரங்களும், தமிழ் இயக்குனர்களும் சமூக வலைத்தளங்களில் செயல்படுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அது ரசிகர்களை சென்றடைய மிகவும் எளிதான வழி என்பது அவர்களுக்கு இன்னுமா தெரியாமல் இருக்கும்....?


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions