தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைக்க களமிறங்கியிருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்

Bookmark and Share

தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைக்க களமிறங்கியிருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்

தற்போது உள்ள கால கட்டத்தில் மக்களை தியேட்டர்களுக்கு வரவழைப்பது பெரிய விஷயமாக மாறிவிட்டது. படங்களும் இன்றைய சூழ்நிலையில் ஒரு வார படங்களாகவே மாறி வருகிறது. இந்த ஒரு வார படங்களிலும் பார்வையாளர்கள் இல்லாமல் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது.

ஒரு படத்தோட முடிவு, அந்த படம் ரிலீசாகும் முதல் காட்சியிலேயே தெரிந்து விடுகிறது. மேலும் திருட்டு விசிடி அதிகம் வெளிவருவதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் நஷ்டம் அடைந்து சிறந்த படமும் சரியாக ஓடாத சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் பெருத்த நஷ்டம் அடைகின்றனர். பல தியேட்டர்களில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையும் நிலவி வருகிறது.

இதை தடுப்பதற்கு திரையுலகத்தினர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். திருட்டு விசிடியை ஒழித்து மக்களை திரையரங்குகள் நோக்கி படையெடுத்து வர பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்துவரும் நிலையில், தற்போது தியேட்டர் உரிமையாளர்களும் மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க புதிய முயற்சிகளை எடுத்துள்ளனர்.

கோவில்பட்டியில் உள்ள சண்முகா தியேட்டரில் மக்களை தியேட்டருக்கு வரவழைக்கும் முயற்சியாக ஒரு நபருக்கு மாத சந்தாவாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. வருடத்திற்கு 1000 ரூபாய் செலுத்திவிட்டால் வருடம் முழுவதும் அந்த தியேட்டரில் வெளியாகும் குறைந்தது 40 படங்கள் வரை பார்க்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் மதுரை மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள காசி தியேட்டரில் கட்டணத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இவ்வாறு தியேட்டர் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதுமையை புகுத்த திட்டமிட்டு வருகின்றனர். இந்த முயற்சியால் தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் வரும் என்று நம்புகின்றனர். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions