வாய்மை படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்! -சாந்தனு

Bookmark and Share

வாய்மை படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்! -சாந்தனு

சக்கரகட்டி, சித்து ப்ளஸ்-2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி ஆகிய படங்களில் நடித்தவர் சாந்தனு. தற்போது வாய்மை என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும், கவுண்டமணி, தியாகராஜன், கே.பாக்யராஜ், ராம்கி, ஊர்வசி, பூர்ணிமா, மனோஜ், ப்ருத்வி உள்பட 14 முக்கிய கேரக்டர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மின்மேக்ஸ் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தை செந்தில் என்ற புதியவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது.

அதையடுத்து, மாலை 4 மணி அளவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது வாய்மை படத்தில் தான் நடித்தது குறித்து சாந்தனு பேசுகையில், இந்த படத்தின் கதையை அதிகாலை 6 மணிக்கு கேட்டேன்.

டைரக்டர் செந்தில் இரண்டரை மணி நேரம் சொன்னார். கதை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது அதையடுத்து என் தந்தையும் 4 மணி நேரத்துக்கு மேல் கதை கேட்டார். பின்னர் கதையின் மீதுள்ள நம்பிக்கையில் என்னை நடிக்க சொன்னார்.

அந்த வகையில், இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த வாய்மை படத்தில் நடித்தேன். அதோடு, உதவி இயக்குனராகவும் பணியாற்றினேன். இந்த படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக, இயக்குனருடன் சேர்ந்து பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன்.

முக்கியமாக, இந்த படத்தில் அதிக டயலாக் பேசாமல், நிறைய பார்பார்மென்ஸை கொடுத்திருக்கிறேன். அதோடு, பல சீனியர் நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்திருப்பதால் அவர்களிடமிருந்து நிறைய நடிப்பை கற்றுக்கொண்டேன்.

அது எனக்கு பெரிய பயனாக இருந்தது. மேலும், என் தந்தை கே.பாக்யராஜ் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். தங்குவதற்கு இடமின்றி, சாப்பிட வழியின்றி இன்னும் எத்தனையோ பெரிய கஷ்டங்களையெல்லாம் தாண்டித்தான் சினிமாவில் என்ட்ரியாகியிருக்கிறார்.

அதைப்பார்க்கையில் நான் பட்டதெல்லாம் ஒரு கஷ்டம் என்று சொல்ல முடியாது. அதனால், சினிமாவில் இன்னும் வித்தியாசமான கதைகளில் நடித்து நிறைய கஷ்டப்பட நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் சாந்தனு. 

 


Post your comment





Related News
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
ஷாந்தனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம், முன்னணி பிரபலங்களுடன் கூட்டணி - புகைப்படம் உள்ளே.!
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நான் விஜய் ரசிகர்னு சொன்னா அண்ணாவுக்கு பிடிக்காது - ஏன்? - மனம் திறக்கும் சாந்தனு
போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு
காங்கிரஸுக்கு எதிராக எழுந்த வாய்மை- கொதிப்பில் காங்கிரஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions