சாந்தனுவை அழ வைத்த இயக்குனர்!

Bookmark and Share

சாந்தனுவை அழ வைத்த இயக்குனர்!

கண்டேன் படத்தில் பப்ளிமாஸ் போன்று காட்சியளித்த சாந்தனு, இப்போது வாய்மை படத்துக்காக தனது கெட்டப்பை முற்றிலுமாக மாற்றி தாடி, மீசை வைத்த கெட்டப்பில் நடித்துள்ளார்.

குறிப்பாக, மரத்தை சுற்றி டூயட் பாடி வந்த சாந்தனு இந்த படத்தில் ஒரு அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது ஒரு மேல்தட்டு ஹீரோ நடிக்கும் அளவுக்கு சமுதாய பார்வை கொண்ட வேடமாம்.

அதோடு முதன்முறையாக சாந்தனு 3 விதமாக கெட்டப்பில் நடித்திருக்கிறாராம். ஒவ்வொரு கெட்டப்பிலும் ஒவ்வொரு மாதிரியான பர்பார்மென்சை கொடுத்து அசத்தியிருக்கிறாராம்.

இதற்கெல்லாம் மேலாக, ஒரு காட்சியில் அனல் பறக்கும் வசனத்தையும் ஆவேசமாக பேசி நடித்துள்ளாராம். அதில், இந்த நாட்டில் அரிசி, மிக்சி, கிரைண்டர் என எல்லாமே இலவசமாக கிடைக்கும். ஆனா நீதி இலவசமாக கிடைக்குமா? என்று கேட்பாராம்.

இந்த காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக பல கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளதாம். இதுபற்றி சாந்தனு கூறும்போது, வாய்மை படத்தில் நான் நடிப்பது சாதாரணமான வேடம் அல்ல.

அப்படிப்பட்ட ஒரு வேடத்தை என்னை நம்பிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இது என் மீதுள்ள நம்பிக்கையில் மட்டுமே கிடைத்ததல்ல, என் தந்தை கே.பாக்யராஜின் மீதுள்ள மரியாதையின் காரணமாகவே எனக்கு கிடைத்திருக்கிறது.  

மேலும், என்னை இதுவரை எங்க அப்பா அம்மாகூட அழ வைத்ததில்லை. ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் செந்தில் என்னை அழ வைத்திருக்கிறார் என்கிறார் சாந்தனு. 


Post your comment





Related News
ஷாந்தனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம், முன்னணி பிரபலங்களுடன் கூட்டணி - புகைப்படம் உள்ளே.!
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நான் விஜய் ரசிகர்னு சொன்னா அண்ணாவுக்கு பிடிக்காது - ஏன்? - மனம் திறக்கும் சாந்தனு
போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு
காங்கிரஸுக்கு எதிராக எழுந்த வாய்மை- கொதிப்பில் காங்கிரஸ்!
விஜய் மனம்கவர்ந்த சமீபத்திய டீசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions