சாந்தனு முதல் சந்திரன் வரை...கோலிவுட் நட்சத்திரங்களின் காதல் திருமணங்கள்

Bookmark and Share

சாந்தனு முதல் சந்திரன் வரை...கோலிவுட் நட்சத்திரங்களின் காதல் திருமணங்கள்

கோலிவுட்டில் வழக்கத்தை விட இளம் காதல் ஜோடிகளின் திருமணம் இந்த வருடம் சற்று அதிகமாகவே இருக்கிறது. தற்போது உள்ள இளம்நடிகர்கள் பலரும் காதல் திருமணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

பொதுவாக திரைப்படங்களில் இணைந்து நடிக்கும் நடிக, நடிகையர் இடையே காதல் மலர்வதும் அது திருமணத்தில் முடிவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அந்த வரிசையில் ஒருசில நடிகர்களின் காதல் கதைகளை இங்கே நாம் காணலாம்.

சாந்தனு - கீர்த்தி 

நடிகரும், இயக்குநர் பாக்யராஜின் மகனுமான சாந்தனு டிவி தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து மணம் புரிந்து கொண்டார்.

ஆரி - நதியா 

நெடுஞ்சாலை, மாயா படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஆரி நேற்று காலை தனது நீண்ட நாள் காதலியான நதியாவை பெற்றோர் சம்மதத்துடன் மணம் புரிந்து கொண்டார்.

கணேஷ் வெங்கட்ராம் - நிஷா 

அபியும் நானும், தனி ஒருவன் போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற கணேஷ் வெங்கட்ராம் தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான நிஷாவைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 

கயல் சந்திரன் - அஞ்சனா 

இந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கின்றனர் கயல் நாயகன் சந்திரனும், டிவி தொகுப்பாளினி அஞ்சனாவும். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் மணம் புரியவிருக்கின்றனர்.


Post your comment





Related News
ஷாந்தனுவுக்கு அடித்த அதிர்ஷ்டம், முன்னணி பிரபலங்களுடன் கூட்டணி - புகைப்படம் உள்ளே.!
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நான் விஜய் ரசிகர்னு சொன்னா அண்ணாவுக்கு பிடிக்காது - ஏன்? - மனம் திறக்கும் சாந்தனு
போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு
காங்கிரஸுக்கு எதிராக எழுந்த வாய்மை- கொதிப்பில் காங்கிரஸ்!
விஜய் மனம்கவர்ந்த சமீபத்திய டீசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions