ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தலைத்தீபாவளி கொண்டாடும் சாந்தனு – கீர்த்தி

Bookmark and Share

ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தலைத்தீபாவளி கொண்டாடும் சாந்தனு – கீர்த்தி

சாந்தனு நடிகர். கீர்த்தி டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர். இந்த காதல் தம்பதி தலைத் தீபாவளியை எப்படி கொண்டாடப் போகிறார்கள்? சாந்தனுவிடம் இது பற்றி கேட்டோம்...

கே: இந்த வருடம் தலைத் தீபாவளியை இருவரும் எப்படி கொண்டாடப்போகிறீர்கள்?

ப: புதிய அனுபவம். நல்ல முறையில் கொண்டாடுவோம்.

கே: உங்கள் வீட்டிலா? அவர்கள் வீட்டிலா?

ப: இருவர் வீட்டிலும் முறைப்படி கொண்டாடுவோம். பெற்றோரிடம் வாழ்த்து பெறுவோம். என்றாலும் இந்த தலைத்தீபாவளியை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்று அவர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்.

சின்ன வயதில் தீபாவளி தினத்தில் காலையில் குளித்து விட்டு, புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பேன். பட்டாசு தயாரிப்பில் குழந்தை தொழிலாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்த பிறகு, நான் 10–வது வகுப்பு படிக்கும் போதே பாட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டேன். இப்போதும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது இல்லை.

இந்த முறை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடும் அனுபவம் புதிதாக இருக்கும். மகிழ்ச்சியாகவும் இருக்கும். எங்கள் திருமண வாழ்க்கையின் முதல் தீபாவளி மறக்க முடியாததாகவும் இருக்கும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions