தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தும் சாந்தினி

Bookmark and Share

தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தும் சாந்தினி

இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு ஜோடியாக சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுகமானவர் சாந்தினி.

அதன் பிறகு சாந்தினி நடித்த படித்துறை படம் வெளிவரவில்லை. கடைசியாக நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்தார். அதுவும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

தற்போது சாந்தினி வெற்றிமாறன் தயாரிப்பில் அவரது உதவியாளர் ரமேஷ் இயக்கும் வில் அம்பு படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். அடுத்து வெப்பம் இயக்குனர் அஞ்சனா இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

நடித்து முடித்துள்ள போர்குதிரை படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த மூன்று படங்களும் தனக்கு நல்ல இடத்தை பெற்றுத் தரும் என்று நம்புகிறார்.

இதற்கிடையில் தெலுங்கில் 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions