பிரபல நடிகையின் தங்கையான செண்பகமே, செண்பகமே ஹிட் பாடல் நடிகையின் நிலை! சினிமாவுக்கு பின் வாழ்கையில் நடந்த சோகம்

Bookmark and Share

பிரபல நடிகையின் தங்கையான செண்பகமே, செண்பகமே ஹிட் பாடல் நடிகையின் நிலை! சினிமாவுக்கு பின் வாழ்கையில் நடந்த சோகம்

செண்பகமே, செண்பகமே, தென் பொதிகை சந்தனமே என்ற பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எங்க ஊர் பாட்டுகாரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சாந்திபிரியா என்ற நிஷாந்தி. தமிழில் இதுவே இவருக்கு முதல் படம். இப்படத்தின் பாடலின் மூலம் 1987 ல் பிரபலமானார்.

இவர் வேறு யாருமல்ல. பிரபல நடிகையான பானுப்பிரியாவின் தங்கை தான் இவர். தமிழில் சில படங்களில் நடித்த இவர் பாலிவுட் சினிமா பட அதிபர் சித்தார்த்தை திருமணம் செய்து மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார்.

படங்களில் நடிப்பதை விட்டுவிட்ட இவருக்கு வந்த சோதனை அவரது கணவரின் இறப்பு. 2004 ம் ஆண்டு அவரது கணவர் மாரடைப்பால் காலமானார். தற்போது தன் இரு மகன்களுடன் மும்பையில் வாழந்து வருகிறார்.

மேலும் தனது கணவரின் நிறுவனமான ராஜ் கமல் ஸ்டூடியோவை நிர்வகித்து வருகிறாராம். இந்நிலையில் அவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி எதுவாகயிருந்தாலும் நல்ல வேடங்கள் கிடைத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions