பிஸியாகப் போகும் வில்லன் நடிகர்!

Bookmark and Share

பிஸியாகப் போகும் வில்லன் நடிகர்!

தமிழ்ப் படங்களில் நடிக்கும் துக்கடா நடிகர்களுக்கே கதாநாயகன் ஆசை இருப்பதால் வில்லன் வேடத்துக்கு போட்டி குறைவாகவே இருக்கிறது.

அழுத்தமான வில்லன்கள் மிகவும் குறைவாகவே தென்படுகிறார்கள்.பாண்டியநாடு படத்தில் நடித்த ஷரத் லோகிதஷ்வா அந்த இடத்தை எடுத்துக் கொள்வார் போலத் தெரிகிறது. பாண்டியநாடு படத்தில் யாரிந்த நடிகர் என்று பேசப்பட்டார். அவர் ஏற்கெனவே எதிர்நீச்சலில் நந்திதாவின் அப்பாவாக நல்லவராகவே நடித்திருப்பார்.

அண்மையில் வந்த மாஸ், இந்தியா பாகிஸ்தான் படங்களிலும் நடித்துள்ளார். இருந்தாலும் ஜீவா நடிக்கும் திருநாள் படத்தில் படத்தை தூக்கிப்பிடிக்கும் மூவரில் ஒருவராக ஷரத் லோகிதஷ்வா  நடிக்கிறார்.

இப்படம் வெளிவந்த பிறகு அவருக்கு வாய்ப்புகள் படையெடுக்கும் என்கிற அளவுக்கு அழுத்தமான வில்லனாக வருகிறார்.  இவர் கன்னடத்தில் பிரபல பிஸியான வில்லன் நடிகர்.

பல்வேறு மேடை அனுபவங்கள் பெற்றுத்தான் சினிமாவுக்கு வந்துள்ளார். கன்னடத்தில் 2013ல் 18 படங்கள், 2014ல் 13 படங்கள், 2015ல் 12 படங்கள் என்று நடித்து இருக்கிறார் என்றால் பாருங்களேன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions