கல்யாணத்தை விட இது தான் முக்கியம் - சிம்பு நாயகி பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்.!

Bookmark and Share

கல்யாணத்தை விட இது தான் முக்கியம் - சிம்பு நாயகி பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக உள்ளவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக தெலுங்கு நடிகையான ஷார்மி நடித்திருந்தார். இதனையடுத்து தமிழில் ஆஹா எத்தனை அழகு, லாடம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் எக்கச்சக்கமான படங்களிலும் நடித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குறைந்து வருவதால் இயக்குனர் பூரி ஜெகநாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் என தெலுங்கு வட்டாரங்களில் செய்திகள் வலம் வந்தன.

இது குறித்து தற்போது ஷார்மி கூறியிருப்பதாவது, எனக்கும் பூரி ஜெகநாத்துக்கும் இடையே தொழில் ரீதியான நட்பு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பெண்ணுக்கு திருமணம் மட்டுமே பாதுகாப்பு இல்லை. பணம் தான் பாதுகாப்பு. அது என்னிடம் உள்ளது நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions