ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் கஜோலை மிஸ் பண்ணுறேன்.. ஷாருக் கான்

Bookmark and Share

ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் கஜோலை மிஸ் பண்ணுறேன்.. ஷாருக் கான்

பாலிவுட்டின் சூப்பர் ஹிட் ஜோடி என்று அழைக்கப்படும் ஷாருக்கான், கஜோல் ஜோடி நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்து கலக்க உள்ளனர்.

பாஸீகர், குச் குச் ஹோத்தா ஹை, தில் வாலே துல்கனியா லே ஜாயங்கே, மை நேம் இஸ் கான் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் ஷாருக்கானும், கஜோலும் ஜோடியாக நடித்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'மை நேம் இஸ் கான்' படத்திற்கு பிறகு இந்த ஜோடியை ஒன்றிணைத்து படம் பண்ண பல டைரக்டர்கள் முயன்றும் முடியாமல் போனது. தற்போது, அந்த ஜோடியை இணைக்கும் முயற்சியில் டைரக்டர் ரோகித் ஷெட்டி வெற்றி பெற்றுள்ளார்.

ஆமாம், ஷாருக்கானை வைத்து சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ஹிட் படத்தைக் கொடுத்த ரோகித் ஷெட்டி இப்போது மீண்டும் ஷாருக்கானை வைத்து தில்வாலே என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில், கஜோல் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சனோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்நிலையில், தில் வாலே துல்கனியா லே ஜாயங்கே படத்தின் 20 வது ஆண்டு விழா தில்வாலே பட செட்டில் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

அப்போது பேசிய ஷாருக்கான், இந்தப்படம் எனக்கும் கஜோலுக்கும் எதிர்பாராதவிதமாக அமைந்தது. நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் கஜோலை மிஸ் பண்ணுகிறேன்.

தற்போது இந்தப் படத்தில் நடிக்க கஜோல் 150 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியு்ள்ளார். இதற்காக அவரது குடும்பம் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு நேரம் ஒதுக்கியுள்ளார் என பெருமைபட தெரிவித்தார் ஷாருக்கான்.

 


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
ஷாருக்கானை ரீப்ளேஸ் செய்வாரா அஜித்?
2.0 ஃபர்ஸ்ட் லுக் விழாவுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? அதிரும் திரையுலகம்!
28 வருடம் கழித்து டிகிரி பட்டம் வாங்கிய ஷாருக்கான்!
தொடர்ந்து வெளியாகும் ஷாரூக்கின் ராயிஸ் புகைப்படங்கள்!
ஷாருக்-சல்மான் மோதலை தவிர்க்க முயற்சி!
கர்நாடகாவில் தில்வாலே படத்தை திரையிட விடாமல் விஷ்வ ஹிந்து பரிஷத் அராஜகம்
மீண்டும் ஷாருக்கானுக்கு ஆப்பரேஷன்!
ஐஸ்வர்யராயின் மகளுடன் தன் மகனை ஜோடி சேர்த்த ஷாருக்கான்!
சல்மான்கானின் விடுதலைக்கு மகிழ்ச்சியடைந்த ஷாருக்கான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions